அம்மாவுக்கு பரிசு!

அம்மாவுக்கு பரிசு!

சிறுவர் கதை!

காலைல இருந்து தானியாவுக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு ஒவ்வொரு வருடமும் அம்மாவுக்கு பிறந்தநாள் வருது ஆனா நம்மால் மட்டும் ஒண்ணுமே செய்ய முடியவில்லை என்கிற ஏக்கம் தானியாக்குள்ள எப்பவுமே இருக்கும்.

பத்து வயது சிறுமியான அவளுக்கு நாம என்ன சம்பாதிக்கிறோம் வாங்கி தர? அப்பாவோ குடிகாரர்! தினமும் வீட்டு வேலை செஞ்சுட்டு நம்பள அரசு பள்ளி கூடத்துல சேர்த்து படிக்க வைக்கிறாங்க அம்மா. மூணு வேளை சாப்பாடு, படிப்பு எல்லாம் இருக்கு. ஆனா என்னால என்ன சம்பாதிக்க முடியும்? நான் எங்க அம்மாவோட பிறந்தநாளுக்கு என்ன தர முடியும்?

மத்த வசதி உள்ள பிள்ளைகள் எல்லாம் அம்மாவுக்கு அதை செஞ்சேன் இத செஞ்சேன் என்று சொல்றப்ப தானியாவுக்குள்ள ஒரு வருத்தம் வரும் எனக்காக ஓடி ஓடி உழைக்கும் அம்மாவுக்கு தன்னால எதுவும் தர முடியலன்னு நினைப்பா . இந்த வருஷமும் அம்மாவுக்கு பிறந்தநாள் வருது, ஆனா எதுவுமே செய்ய முடியலேன்னு அவங்க வீட்ல இருக்குற ஒரே சாமியான பிள்ளையார் கிட்ட மனசார வேண்டிக்கிட்டே இருந்தா. “பிள்ளையாரப்பா எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டு. நான் எங்க அம்மாவுக்கும் ஏதாவது செய்யணும், ஏதாவது பரிசு கொடுக்கணும்னு நினைக்கிறேன் இந்த ஆசையை நிறைவேற்றி வையப்பா”.

பிள்ளையார் தன்னிடம் மனசு விட்டு வேண்டிய அந்த சிறுமியைப் பார்த்து சிரித்தார்.  என்ன செய்யப் போறார் பிள்ளையார்?

தானியா வெளில வந்தா. அம்மாவோட பொறந்த நாளுஎப்பவுமே பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு வரும்னு தெரியும். மார்க்கெட் ரோட்டுல பராக்கு பார்த்துகிட்டே போனா தான்யா . நிறைய பேர் வந்து பிள்ளையார் சிலைகள் வாங்கிட்டு போறத பாத்துட்டு இருந்தா. ரொம்ப கவலையோட போயிட்டு  இருந்தப்ப  ரோட்டு ஓரமா ஒரு பாட்டி ஒரு கூடையில இருந்த தன்னுடைய சிலைகளை விற்க முடியாம சோகமா இருந்ததை பார்த்தா.

பாட்டியோட சோகமான முகம் பார்த்து இரக்கப்பட்ட தான்யா அந்த பாட்டி கிட்ட போய் ”ஏன் பாட்டி நீங்க இவ்வளவு சோகமா இருக்கீங்க..? அப்படின்னு கேட்டா ” கண்ணு ”சிலை எல்லாம் தூக்கிட்டு வந்தனா வழியில ஒரு கல்லு தடுக்கிச்சு, அதுல என்னோட கால்ல அடிபட்டு ரத்தமா வழியுது. இந்த பிள்ளையார் சிலைகளை வித்தாதான் நான் போட்ட காசு எடுக்க முடியும் என்ன பண்றதுன்னு தெரியலமா”.

உடனே அடடா ஆமா காயம் பெரிசா இருக்கு. இருங்க உங்க காயத்துக்கு நான் மருந்து போட்டு விடுறேன்னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த தெரிஞ்ச மருத்துவர்கிட்ட போய் மருந்து வாங்கிட்டு வந்து அந்த பாட்டி காலில் மருந்து பொட்டுவிட்டு, பாட்டிகிட்ட நான் இந்த பொம்மைகளை விற்க முயற்சி செய்யறேன் பாட்டீன்னு  கேட்டு அந்த சிலைகளை தன் தலையில வெச்சுக்கிட்டு தான்யா விற்க போயிட்டா. நிறைய பேர் சின்ன குழந்தையான தான்யா சிலை விற்பதை பார்த்து தன்யா கிட்ட இருந்த சிலைகலை வாங்கிடறாங்க.

அந்த பாட்டி கிட்ட போய் பணத்தை எல்லாம் கொடுக்கிறா தான்யா. பாட்டிக்கு சந்தோசத்துடன் அவளை அப்படியே உச்சிமோந்து உன்னுடைய வேலைக்கு தகுந்த கூலின்னு சொல்லிட்டு ஒரு சிறு பங்கு பணத்தை எடுத்து  அந்த குழந்தைகிட்ட கொடுத்து மீதமா இருக்கிற ஒரு பிள்ளையார் சிலையும் அவ கையில கொடுக்கிறாங்கபாட்டி .

தன்யா பாட்டிக்கு நன்றி சொல்லிட்டு,  ஓடி போயி அந்த காசை வச்சு அம்மாவுக்கு ஒரு நல்ல பரிசு பொருளை வாங்குறா... அம்மா ஆசைப்பட்ட வளையல், பொட்டு, கண்ணாடி எல்லாத்தையும் வாங்கி அழகா பேக் பண்ணி அம்மா கையில வந்து கொடுத்தா.

அவ அம்மாவுக்கு அதைத் திறந்து பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம். அது தங்க நகை இல்லை. அது சாதாரண கவரிங் நகை தான். தன் மகளின் செயல்களை நினைத்து தான்யாவின் அம்மா முகத்தில அவ்ளோ பெருமிதம்.

இதெல்லாம் செய்யறது யார் தெரியுமா? அந்த பாட்டிக்கு காலை இடற வச்ச கல்லும் பிள்ளையாரு, இந்த களிமண்ணில் இருக்கிறதும் பிள்ளையாரு, தான்யா வித்ததும் அந்த பிள்ளையார் தான்!

தான்யா நினைச்சதை சாதிச்சிட்டேன் ரொம்ப சந்தோஷப்பட்டா இதை சாதிக்க வைத்து அந்த பிள்ளையாருக்கு கூட இந்த புது பிள்ளையாரும் சேர்த்துக்கிட்டாரு. உழைப்பு இருந்தா ஆசைப்பட்டது நடக்கும்  எப்பேர்ப்பட்ட செயலும் செஞ்சு முடிக்கலாம் என்பதை பிள்ளையார் காட்டிட்டாரு! இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி தான்யாவுக்கு மட்டுமல்ல  இதே போல உழைப்பு இருந்தா எல்லாருக்குமே வெற்றிதான்!

இல்லையா சுட்டீஸ்...?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com