இந்த மாதப் பிரபலங்கள்!

இந்த மாதப் பிரபலங்கள்!
gokulam strip
gokulam strip

மைக்கேல் ஃபாரடே

1791 செப்டெம்பர் 22 அன்று ஏழைமையான குடும்பத்தில் பிறந்த மைக்கேல் ஃபாரடே, இயற்பியல் மற் றும் வேதியியல் விஞ்ஞானி. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் பள்ளிப் படிப்பு கனவாகிப் போனது. குடும்ப வருமானத் துக்காக லண்டனிலுள்ள ஒரு புத்தகக் கடையில் புத்தகங் களை  பைண்டிங் செய்யும் வேலையில் சேர்ந்தார். பைண்டிங் குக்கு வரும் புத்தகங்களைப் படித்து, சுயமாக அறிவை வளர்த்துக்கொண்டார். குறிப்பாக அறிவியல், மின்சாரம் தொடர்பான புத்தகங்களை அதிகம் படித்தார்.

1812ல் லண்டன் ராயல் சொசைட்டியில் விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி நிகழ்த்திய அறிவியல் சொற்பொழிவை  அப் படியே எழுதி அவருக்கு அனுப்பி வைத்ததுடன், ஆய்வுக் கூடத்தில் தனக்கு ஒரு வேலை போட்டுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். இவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட டேவி, தனது ஆய்வுக் கூடத்தில் கண்ணாடிக் குடுவை களைக் கழுவி வைக்கும் வேலையைக் கொடுத்தார்.  அங்கு நடைபெறும் பரிசோ தனைகளைக் கூர்ந்து கவனித்தார். தானே சில பரிசோத னைகளை மேற்கொள்ளவும் அனுமதி பெற்றார்.டேவியின் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த ஃபாரடே காலப் போக்கில் அவரது சக விஞ்ஞானி என்ற நிலைக்கு உயர்ந்தார்.

25 ஆண்டு கால கடுமையான உழைப்பின் பயனாக காந் தத்தையும் கம்பிச் சுருளையும் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முதல் ‘டைனமோவைக்’ கண்டுபிடித்தார். மின்காந்தத் தூண்டல் மற்றும் அதன் விதிகள், மின்சாரம் மற்றும் வேதியியல் தனிமத்தின் இணைத்திறன் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள உறவு போன்றவற்றையும் கண்டுபிடித்தார்!

1883ல் ராயல் இண்ஸ்டிடியூட்டின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். சர் பட்டமும் ராயல் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் பதவியும் தேடி வந்தபோது மறுத்துவிட்டார்.

ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவியிடம், “உங்கள் கண்டுபிடிப் புகளிலேயே மகத்தானது எது?” என்று கேட்தற்கு உடனே அவர் சொன்ன பதில், “மைக்கேல் ஃபாரடே!” பிற்காலத்தில் டேவியைவிட அதிகப் புகழ்பெற்றார் ஃபாரடே.

பெரியார்

பெரியார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமி எழுச்சியூட்டும் அரசியல்வாதி, மூட நம்பிக்கைகளைக் களையும் பகுத்தறிவுவாதி, சாதி வேற்றுமைகளை அகற்றும் சமூகச் சீர்திருத்த வாதி என்று பன்முகம் கொண்டவர். 

1879 செப்டெம்பர் 17  அன்று வெங்கட நாயக்கருக்கும் சின்னத்தாயம்மைக்கும் மகனாக ஈரோட்டில் வசதியான  குடும்பத்தில் பிறந்தார். 

ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு தந்தையின் வணிகத்தில் ஈடுபடுட்டார். 19 வயதில் 13 வயது  நாகம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இளம் வயது முதற்கொண்டே மூட நம்பிக்கைகளை எதிர்த் தல், சாதி வேற்றுமை சாடல், கடவுள் மறுப்பு என பகுத்தறிவுவாதியாகத் திகழ்ந்தார்.

1919ல் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந் தார். அந்நியத் துணிகளை விற்கும் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் முன் மறியல், ஒத்து ழையாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறை தண்டனை பெற்றார். மது விலக் குக்கு ஆதரவாக தனது தோட்டத்திலிருந்த  தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். 1922ல் மதறாஸ் மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேர ளத்தில் வைக்கம் என்ற ஊரில் கோயிலுக்குள் தலித்துகள் நுழையத் தடையிருந்தது. இதை எதிர்த்து 1924ல் டி.கே. மாதவன் நடத்திய சத்யாக்கிரகப் போராட்டத்தில் பெரியாரும் கலந்துகொண்டு சிறை சென்றார். இதன் கார ணமாக அவர் ‘வைக்கம் வீரர்’ என்று அழைக் கப்பட்டார்.

திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட் டத்தில் அரசுப் பணிகளிலும் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் இது இன மற்றும் சாதி வேற்றுமைகளை வளர்க்கும் என காங்கிரஸ் கட்சி மறுக்கவே, 1925ல் காங்கிரஸில் இருந்து விலகி ‘சுயமரியாதை இயக்கத்தை’ தோற்றுவித்தார். பகுத்தறிவு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கங்களுக்கு எதிர்ப்பு, பெண் விடுதலை, விதவை மறு மணம், குழந்தைத் திருமணம் எதிர்ப்பு ஆகியவற்றைத் தீவிரமாக வலியுறுத்தினார். மலே ஷியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று தனது சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கினார்.

1937ல் அப்போதைய முதல்வர் ராஜாஜியின் ‘இந்தித் திணிப்பு’ கொள்கையை எதிர்த்தார். 1939ல் ‘நீதிக் கட்சி’யின் தலைவராகி, 1944ல் அதற்குத் ‘திராவிடர் கழகம்’ என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்.

‘திராவிட நாடு’ என்ற பெயரில் தனிநாடு கோரியதாலும், அரசியல் கட்சியாக மாற்ற விரும்பாததாலும், மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டதாலும் அண்ணா துரை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் திரா விடர் கழகத்தில் இருந்து விலகி, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர்.

பகுத்தறிவுச் சிற்பி, வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன், ஈரோட்டு பூகம்பம் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, சமூகத் தொண்டையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பெரியார் 1973 டிசம்பர் 24 அன்று தனது 94 வயதில் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

ஓ ஹென்றி

வில்லியம் சிட்னி போர்ட்டர் என்ற இயற்பெயரைக் கொண்ட ‘ஓ ஹென்றி’ 1862 செப்டெம்பர் 11 அன்று அமெ ரிக்காவில் பிறந்தார். மூன்று வயதாக இருக்கும்போது தாய் இறந்ததால் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சிறு வயது முதற் கொண்டே கதைகள் படிப்பதில் ஆர்வமுண்டு. குறிப்பாக ‘ஆயிரத்தோரு இரவுகள்’ கதை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு 1881ல் மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து டெக்ஸா ஸுக்குச் சென்று 1891 முதல் 1894 வரை தேசிய வங்கியில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பிறகு ரிச்சார்ட் ஹால் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் சிறிது காலம் வேலை பார்த்தார். ரிச்சர்ட் ஹாலுக்கு நில ஆணையராகப் பதவி கிடைக்கவே ஓ ஹென்றிக்குத் தனது அலுவலகத் திலேயே படவரைவாளராக வேலை கொடுத்தார்.  இருப் பினும் போதிய வருமானம் இல்லாததால் ‘ஹூஸ்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகை யில் செய்தியாளராகச் சேர்ந் தார். மருந்தாளுநர், வங்கியா ளர், படவரைவாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஓ ஹென்றி கிடார், மாண்டலின் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதிலும் திறமையானவர்.

ஆதல் எஸ்தெஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.  குடும்ப வருவாயை அதிகரிக்கச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் சிறுகதை 1899ல் வெளியானது. தனது பத்திரிகைப் பணியை விரிவுபடுத்த 1902ல் நியூயார்க்கில் குடியேறி முழு நேர எழுத்தாளரானார். 1906 வரை நியூயார்க் வேர்ல்ட் என்னும் பத்திரிகையில் வாரம் ஒரு சிறுகதை என்ற கணக்கில் ஏராள மான சிறுகதைகள் எழுதிக்குவித்தார். 1904ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தனது வாழ்நாளில் மொத்தம் 10 தொகுப்புகளில் 600க்கும் அதிகமான கதைகளை எழுதினார்.

1910 ஜூன் 5.  நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார். அவர் மறைந்து நூறாண்டுகளுக்குப் பிறகும் உலகம் முழுவதும் சிறுகதையின் தந்தையாகக் கொண்டாடப் படுகிறார் ஓ ஹென்றி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com