இந்தி அவசியமில்லை: மன்னிப்பு கேட்ட சோமேட்டோ நிறுவனம்!

இந்தி அவசியமில்லை: மன்னிப்பு கேட்ட சோமேட்டோ நிறுவனம்!

இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமேட்டோ. தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளதுசென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சோமேட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து, அந்த உணவு சரியான நேரத்துக்கு வந்து சேரவில்லை என்பதால் கஸ்டமர் கேரில் புகார் அளித்துள்ளார்.

அதற்கு சோமேட்டோ கஸ்டமர் கேர் அதிகாரி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளாகியது. அவர் கூறீயதாவது:

''உங்கள் பிரச்சனையை இந்தியில் கூறுங்கள். அப்போதுதான் நீங்கள் அந்த உணவுக்கு செலுத்திய பணம் திரும்பப் கிடைக்கும். இந்தியராக இருந்து கொண்டு தேசிய மொழி இந்தி தெரியவில்லை என கூறுகிறீர்கள் கொஞ்சமாவது ஹிந்தி கற்றுகொள்ளுங்கள்''

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்ததாக வந்த தகவலையைடுத்து பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதுகுறித்து , சோமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து சோமேட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

எங்கள்வாடிக்கையாளர்சேவை முகவரின்நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில்ஒற்றுமை என்ற நம்தேசத்தின்மாறுபட்ட கலாச்சாரத்தின்மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம்காட்டிய ஊழியரை பணிநீக்கம்செய்துள்ளோம். பணிநீக்கம்என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும்மக்களின்உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப்பகிரக்கூடாது எனத்தெளிவாக நாங்கள்எங்கள்முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

உணவு மற்றும்மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின்இரண்டு அடித்தளங்கள்என்பதை நாங்கள்புரிந்துள்ளோம். அவை இரண்டையும்நாங்கள்முழுமையாக உணர்ந்துள்ளோம்.

இவ்வாறு சோமேட்டோ பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com