இலங்கைக் கடற்படைக்கு எதிர்ப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

இலங்கைக் கடற்படைக்கு எதிர்ப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.இதையடுத்து அந்த மீனவர்களின் விடுதலை மற்றும் இலங்கைக் கடற்படை கைப்பற்றிய தமிழகர்களின் படகுகள் ஆகியவற்றை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாளை மறுநாள் (பிப்ரவரி 11) ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவ்பிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்ததாவது:

இன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மீனவர்கள் தங்களுடைய பகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும். ஆனாலும் நீதி கிடைக்கப் போராடுகிறோம். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

-இவ்வாறு அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com