spot_img
0,00 INR

No products in the cart.

​இன்ப ஒளி சூழும் அமாவாசை!

எம்.கோதண்டபாணி

மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும், குறிப்பாக இரண்டு அமாவாசை தினங்களுக்கு மட்டும் சிறப்புண்டு. அவை : உத்தராயண கால ஆரம்பமான தை மாத அமாவாசையும், தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாத அமாவாசையும் ஆகும். இவை தவிர, புரட்டாசி மாத அமாவாசை நாளும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றாலும், குறிப்பாக இந்த அமாவாசை தினங்களில் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கிறது சாஸ்திரம்.

சூரிய பகவான் தனது வடக்கு திசை பயணத்தைத் தொடங்கும் உத்தராயண காலத்தின் துவக்கமான தை மாதம் மிகவும் புனிதமானது. இம்மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமையும் தினமே தை அமாவாசை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்மாத அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது மிகவும் முக்கியமாகும். இந்த தர்ப்பண வழிபாட்டால் முன்னோர்களின் அருளாசியால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இன்று கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குதல் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

பொதுவாக, எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதை அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது விதி. குறிப்பாக, ராகு கேது பரிகாரம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றுக்கு அமாவாசையன்று பரிகாரம் செய்வது மிகவும் நன்மை பயப்பதாகும். அதிலும் தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளில் மேற்கொள்ளப்படும் பரிகாரங்களுக்கு இரட்டிப்புப் பலன்கள் உண்டு.

டி மாத அமாவாசையன்று பித்ருக்கள் அவர்களின் லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்படுகிறார்கள். இரண்டு மாதப் பயணத்தில் புரட்டாசி மாதம் அவர்கள் பூமிக்கு வந்து சேர்கிறார்கள். புரட்டாசி மாதம் முன்னோர்கள் பூமியில் உறையும் காலம். அதனால்தான் அந்த மாதத்தைப் புனிதமாகக் கருதி இறை வழிபாட்டை மேற்கொள்கிறோம். உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுகிறார்கள். பூமிக்கு வந்து நம்முடன் தங்கியிருந்து கிளம்பும் பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பண வழிபாட்டைச் செய்து அவர்களை வழியனுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

பசி, தாகத்தோடு வந்த முன்னோர்களை சாந்தி செய்து, அவர்களின் பசி, தாகத்தைத் தீர்த்து சந்தோஷப்படுத்தும்போது, அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை வாழ்த்தி வரம் தருவார்கள். முன்னோர் வழிபாடு என்பது, குடும்பத்தில் துர் சம்பவங்கள் நிகழாமல் காக்கும் ஒரு காப்பாகும். பித்ரு வழிபாட்டினால், தடைப்பட்ட எந்தக் காரியமும் தடையின்றி துலங்கும் என்பதை சிவபெருமானே, ஸ்ரீராமரிடம் கூறியிருக்கிறார்.

ட்டத்தை மறுத்து, அரச சுக போகங்களைத் துறந்ததோடு, வனத்தில் தனது அன்பு மனைவியையும் தொலைத்தார் ஸ்ரீராமர், இவை போதாதென்று பாசமிகு தந்தை தசரதரையும், நட்புமிகு ஜடாயுவையும் கூட இழந்தார். அச்சமயம் வந்த அமாவாசை திதியில் ஸ்ரீராமர் அவ்விருவரையும் பித்ரு தர்ப்பணம் செய்து வணங்கினார். அப்போது அவர் முன்பு தோன்றிய சிவபெருமான், ‘முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்கியதால், அனைத்துப் பாவங்களும் நீங்கி, வேண்டும் நன்மைகள் அனைத்தும் தேடி வரும்’ என்று அருளாசி வழங்கினார் என்கிறது புராணச் செய்தி. அதேபோல், ‘முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால் கூட கருணை காட்ட முடியாது’ என்கிறது கருட புராணம்.

தை அமாவாசையன்று முன்னோர் வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதி மற்றும் திருப்தி அடைவது மட்டுமல்ல; செய்பவர் வாழ்விலும் நற்பலன்கள் பெருகும். முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய பித்ரு கடனை அடைத்துவிட்டால் இந்த பூமியில் நமக்கு உண்டான அனைத்துக் கடன்களும் தானாகவே நிவர்த்தியாகிவிடும்.

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம் போன்று தமிழகமெங்கும் பல்வேறு திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செல்ல இயலாதவர்கள், அருகிலிருக்கும் நீர் நிலைகளுக்குச் சென்று முன்னோர் வழிபாட்டைச் செய்து பயன் பெறலாம்.

தை அமாவாசை நாளில்தான் அன்னை அபிராமி, அமாவாசையை பௌர்ணமியாக்கி அபிராமி பட்டருக்கு அருள்புரிந்தாள். எனவே, தை அமாவாசை நாளில் அம்பிகையை வழிபட, வாழ்வில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் நீங்கி, இன்ப ஒளி சூழும் என்பது நம்பிக்கை.

எம்.கோதண்டபாணி
கோதண்டபாணி 32 ஆண்டு கால பத்திரிகை பணி. கல்கி குழுமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தீபம் இதழின் உதவி ஆசிரியர் பணி. ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுவது... இந்து சமய பெருமையை எழுதுவது பிடித்தம். Ponniyin Selvan நாவலில் வந்த கோயில்களை தொகுத்து PONNIYIN PAATHAIYIL எனும் தொடர் வெளியாகி தனி புத்தகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...