இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்: தேசிய இளைஞர் தினமாக கொண்டாட்டம்!  

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்:  தேசிய இளைஞர் தினமாக கொண்டாட்டம்!  

சுவாமி விவேகானந்தரின் 159-வது பிறந்த நாள் இன்று நாடெங்கும் தேசிய இளைஞர் தினமாக உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது.

சுவாமி விவேகானந்தர் ஜனவரி12, 1863-ல் ஜனவரி12-ம் தேதி பிறந்தார். இவரதுஇயற்பெயர்நரேந்திரநாத்தத்தா. இளம் வயதிலேயே இவர் ராமகிருஷ்ணபரமஹம்சரின் சீடர் ஆனார். அதையடுத்து அவருக்கு விவேகானந்தர் என பெயர் சூட்டப் பட்டது. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் இளைஞர்களை எழுச்சியடையச்செய்தன. வரது பிரசிததமான 'விழிமின்.. எழுமின்.. அயராது உழைமின்' என்ற சொற்கள் இளைஞர்களை உத்வேகமடையைச் செய்தன. சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் வேதாந்ததத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

மேலும் சுவாமி விவேகானந்தர் 1893-ம்ஆண்டுசிகாகோவில் நடைபெற்ற உலகச்சமய மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றது. இவரது பிறந்த நாளை இந்திய அரசு 1984-ம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com