ஐபிஎல் மெகா ஏலம்: பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறுவதாக அறிவிப்பு!

ஐபிஎல் மெகா ஏலம்: பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறுவதாக அறிவிப்பு!

ஐபிஎல் -2022 கிரிக்கெட் போட்டிக்கு அணிகள் ததம் வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் பெங்களூருவில்  நாளை மறுநாள் (பிப்ரவரி 12  மற்றும் 13) ஆகிய தேதிகளில் நடைபெற்வுள்ளதாக இந்திய கிரிகெட் வாரியம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுரித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவல்;

ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும். இந்நிகழ்ச்சியானது அன்றைய தேதிகளில் காலை 11 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்த வருடம் முதல் டாடா ஐபிஎல் என அழைக்கப்பட உள்ளது. மேலும் இந்த ஐபிஎல் சீசனில் புதிதாக 2 அணிகள் இணைந்து 10 அணிகள் கொண்டதாக மாறி உள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு 74 போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். தங்கள் அணிக்கு சிறந்த பேட்மேன்களை தாண்டி, கேப்டன்களையும் அணி நிர்வாகம் தேடி வருகிறது. இதன் காரணமாக மெகா ஏலத்தில் சில வீரர்களின் பங்குகள் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-இவ்வாறு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இதுவரை, 10 உரிமையாளர்களும் தங்கள் அணியில் மொத்தம் 33 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com