0,00 INR

No products in the cart.

ஜெயில்: திரைப்பட விமர்சனம்

ராகவ் குமார்.

வசந்த பாலன் இயக்கிய அங்காடி தெரு,வெயில் போன்ற படங்களில் யதார்த்தமான மனிதர்களின் வாழ்வை ஒரு அழகியலுடன் சொல்லியிருப்பார்.இதே எதிர் பார்ப்புடன் ஜெயில் படத்திற்கு சென்றால் நமக்கு கிடைப்பது எமாற்றமே. ஜெயில் என்ற தலைப்பை பார்த்து விட்டு இது சிறை பற்றிய அல்லது சிறை கைதிகளின் வாழ்வை பற்றிய படம் என்று நினைத்து படம் பார்க்க ஆரம்பித்தால் அதுவும் இல்லை.

பின் ஜெயில் எதை பற்றிய படம்? பல டைரக்டர்கள் சொன்ன அதே வட சென்னை கதைதான். அதே ரவுடியிசம், அதே வெட்டு குத்து, கஞ்சா கடத்தல், புள் ளிங்கோ ஆட்டம், மது, புகை,கத்தி பேசும் கதாபாத்திரங்கள்  இன்னமும் சில.நடுவில் குடிசை மாற்று வாரியத் தால்  பகுதி மக்கள் இடபெயர்ச்சி ஆவது பற்றி சொல்ல முன் வருகிறார் டைரக்டர். அதுவும் முழுமையாக இல்லை.வட சென்னை காவேரி நகர் பகுதி மக்களை சமுதாயமும், காவல் துறையும் கிரிமினல்களை போன்று நடத்து கிறது.இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை தர பல இடங்களில் மறுக்கிறார்கள்.இப்பகுதியில் வேலைக்கு எதுவும் செல்லாமல், அடி தடியில் ஈடுபட்டு வருபவன் கர்ணா (ஜி வி பிரகாஷ் ).கர்ணாவின் நண்பன் கலை (பசங்க பாண்டி )நண்பன் ஒருவன் கொலைக்கு பழி தீர்க்க கொலை செய்து விட்டு சிறைக்கு போகிறான்.

கர்ணா நண்பனை மீட்க காவல் துறை அதிகாரி பெருமாளை (ரவி மரியா )அணுகுகிறான். அதிகாரிகலையை மீட்டு விடலாம் என்று நம்ப வைத்து தன்  சுய கிரிமினல் தேவைக்கு பயன் படுத்தி கொள்ள முயல்கிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது. நண்பன் சிறையில் இருந்து மீட்கப்பட்டா னா என்பதை காதல், அம்மா செண்டிமெண்ட், ஒரு சில கொலைகள் என கலவையாக சொல்லி இருக்கிறார் டைரக்டர். அழுக்கான ஜி வி பிரகாஷ் துள்ளலும், வேகமும், கோபமும் கலந்து நடிப்பை அள்ளி வழங்கி உள்ளார். ரோசா மலராக வரும் அபர்நிதி வெறுப்பது போலவே காதலை மனதில் வளர்த்து அழகான நடிப்பை தந்துள்ளார். நண்பர்கள் பட்டாளம் வட சென்னை வாசியகவே வாழ்ந்து உள்ளனர்.. வில்லனாக ரவி மாரியவும், சமூக ஆர்வலராக செல்வகுமாரும் சரியான தேர்வு.

சுரேஷ் கல்லேரியின் கலை வடிவத்தில் வடசென்னை குடி யிருப்புகள் தத்ருபமாக உள்ளது ஜி வி யின் இசை படத்தை வேகப்படுத் து கிறது. யூகிக் க முடிந்த காட்சிகள் இல்லாமல் திரைக்கதை சுவரசியமாக இருந்திருந்தில் இந்த ஜெயிலுக்கு செல்ல அனைவர்க்கும் பிடித்திருக்கும்.-ராகவ் குமார்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...

நான்கு கதை, நான்கு திசை, நான்கு பார்வை! 

0
-ராகவ் குமார்.   சோனி லைவ் தளத்தில் வெளியான ‘விக்டிம்’  திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ்,  சிம்பு...

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

0
-லதானந்த்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்,...