நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அதிகன மழை எச்சரிக்கை!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: அதிகன மழை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் அதிகன மழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்ததாவது:

நீலகிரியில் ரெட் அலர்ட் காரணமாக முன்னெச்சரிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நீலகிரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை மழை பெய்யும் என்பதால், நீலகிரி மாவட்டத்திற்கு இன்றுமுதல் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மரங்கள் மற்றும் தடுப்பு சுவர் உள்ள இடங்களில், வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் 2 குழுக்களாக 44 மீட்பு வீரர்கள் உதகை வந்தடைந்தனர்.

இவர்கள் இன்று கூடலூர் மற்றும் குந்தா பகுதிகளுக்கு இரண்டு குழுக்களாக சென்றுள்ளனர். இதனிடையே, மீட்புப் பணிகளுக்காக உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் கூடலூர் மற்றும் குந்தா பகுதிகளுக்கு தயார் நிலையில் சென்றுள்ளனர்.

 உள்ளூர் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com