மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கல்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கல்: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை 5 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ன்சுக் மாண்டவியா தெரிவித்ததாவது:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பான 1,977கோடி ரூபாயில், தற்போது 1,500 கோடி ரூபாயை ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் வழங்கியுள்ளது. மீதமுள்ள நிதியானது வருகிற அக்டோபர் 26-ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும்.

-இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இக்கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com