0,00 INR

No products in the cart.

புஷ்பா பட பாடலை கிடார் இசையுடன் பாடிய கரூர் கலெக்டர்: வைரல் வீடியோ!

கரூர் மாவட்ட ஆட்சியரான ர் பிரபு சங்கர் கிடார் இசைத்தபடி, புஷ்பா படப் பாடலை பாடியபடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் அல்லுஅர்ஜுன் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் புஷ்பா. இத்திரைப்படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமாயின. குறிப்பாக நடிகை சமந்தா நடனத்துடன் வெளியான ‘ஊம் சொல்றியா மாமா..’ பாட்டு சூப்பர் ஹிட் ஆகியது. இதே புஷ்பா படத்தில் ‘’பார்வை கற்பூர தீபமா.. பேச்சே கல்யாணி ராகமா..’’ என்ற பாடல் தமிழிலும்,  ‘’பங்கார மாயனே.. ஸ்ரீவள்ளி..’’ என்று  தெலுங்கிலும் பாடகர் ஸ்ரீசித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கிடார் இசைத்த வண்ணம் இப்பாடலை தெலுங்கில் பாடி 1.39 நிமிடம் கொண்ட காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் பிரபுசங்கர் தெரிவித்ததாவது:

கடைசியில் நானும் ஸ்ரீவள்ளி பாடலை இசைத்துள்ளேன்.
தெலுங்கு புஷ்பா திரைப்படத்தில் சித்ஸ்ரீராமின் ‘ஶ்ரீவள்ளி’ பாடல் ஒரு மைல்கல். நானும் ஸ்ரீவள்ளி பாடலை இசைக்க முயற்சித்துள்ளேன். எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால், இந்த என்னுடைய தெலுங்கு பாடலில் தவறுகள் ஏதேனும் இருந்தால், தெலுங்கு பாடகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு குறிப்பிட்டு டிவிட்டரில் அவர் தனது வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

இதைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும், தீராத பணிச் சுமைகளுக்கு இடையே இப்படி ரிலாக்ஸாக பாடுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று கருத்துகள் பதிவிட்டு வருகின்ற்னர்.

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; விழா  மேடையில் பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின்! 

0
தமிழகத்தில்  31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும் அடிக்கல் நாட்டுவதற்கும் இன்று மாலையில்  1 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வருகிறார். -இதுகுறித்து தமிழக அரசு...

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி: அபிலாஷா பராக்!

0
இந்திய விமானப் படையில் இணைந்த  முதல் பெண் போர் விமானி என்ற பெருமை பெற்றுள்ளார் அபிலாஷா பராக். இந்திய ராணுவத்தின்  விமானப் படையில் இதுவரை போர் விமானிகளாக பெண்கள் யாரும் பணிபுரியாத நிலையில், முதன்முறையாக...

சீனர்களுக்கு விசா வாங்கிய வழக்கு: டெல்லி சிபிஐ-யில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்!

0
மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263...

காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை; தீவிரவாதிகள் கைவரிசை!

0
காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான அம்ரீன் பட் (35). என்ற பெண்மணி நேற்றிரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீன் பட், கடந்த இரண்டு வருடங்களாக டிக் டாக் மூலம்...

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

0
பிரதமர் மோடி நாளை (மே 26) தமிழகம் வருகை தரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  -இதுகுறித்து பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: மதுரை -...