ரூ.10 லட்சம் நிவாரணம்: தீக்குளித்து இறந்த கன்னையா குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின்!

ரூ.10 லட்சம் நிவாரணம்: தீக்குளித்து இறந்த கன்னையா குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின்!

சென்னை ஆர்..புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கன்னையா குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். 

சென்னை ஆர்..புரத்தில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து 259 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29-ம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் வசித்து வந்த பழ வியாபாரி கன்னையா (55) என்பவர், தனது வீட்டை அதிகாரிகள் இடிக்க வந்தபோது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவர் உடலில் 92 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொன்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை கன்னையா உயிரிழந்தார்

இந்நிலையில் இன்றூ சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததாவது:

சென்னை ஆர்..புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.  மேலும் ஆர்.எஸ்.புரத்தில் வீடுகள் இடிக்கப் பட்டவர்கள், மயிலாப்பூர் மந்தவெளியில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று வாரிய வீடுகளில் குடியமர்த்தப் படுவார்கள்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com