செஸ் ஒலிம்பியாட்; இன்று கோலாகல நிறைவு விழா! 

செஸ் ஒலிம்பியாட்; இன்று கோலாகல நிறைவு விழா! 

மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதக்கங்களை வழங்குவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

–இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்,கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இன்றுடன் நிறைவடைகிறது. சுமார் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று  விளையாடினர். 

இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அரங்கில் தீவிரமாக நடந்து வருகின்றன.

மாலை 5.30 மணிக்கு தொடங்கும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் வழங்குகிறார்.

மேலும் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மற்றும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com