காமன்வெல்த் கேம்ஸ்; இந்தியாவுக்கு 22 தங்கம்! 

காமன்வெல்த் கேம்ஸ்; இந்தியாவுக்கு 22 தங்கம்! 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான நேற்று 4 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா மொத்தம் 22 தங்கம் உட்பட 61 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது. 

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளின் நிறைவு நாளான நேற்று ஒரே நாளில் இந்தியா 4 தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது.  

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்ஜா அகுலா ஜோடி மலேசியாவின் சூங் ஜாவன்லைன் கரேன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. 

காமன்வெல்த் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் 2-1 செட் கணக்கில் மலேசிய வீரர் டிஸி யாங் நிக்கை வீழ்த்தி தங்கம் வென்றார். கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்திய அணியிலும் லக்சயா சென் இடம்பெற்றிருந்தார். 

ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டிசிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-13 என்ற கணக்கில் இங்கிலாந்தின் பென் லான்சீன் வென்டி ஜோடியை வென்று தங்கத்தை கைப்பற்றியது. 

ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் வெண்கலத்துக்கான போட்டியில் இந்திய வீரர் ஜி.சத்யன் இங்கிலாந்தின் டிரிங்கலை வீழ்த்தி பதக்கத்தைக் கைப்பற்றினார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் அசந்தா சரத் கமலும், இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்டும் மோதினர். இதில் சரத் கமல், பிட்ச்போர்டை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. 

காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான நேற்று மட்டும் 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்தை இந்தியா கைப்பற்றியது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களைப் பெற்று 4-வது இடத்தை பிடித்தது 

இப்போட்டியின் நிறைவு விழா நேற்று கன்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. அதில் இந்திய தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர் 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com