டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் ஓய்வு அறிவிப்பு! 

டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் ஓய்வு அறிவிப்பு! 

கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் 23 முறை வென்ற நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் செரீனா வில்லியம்ஸ். 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் உலக மக்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவர் மட்டுமில்லாது இவரது சகோதரியும் டென்னிஸ் வீராங்கனை ஆவார்.

அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர். 

இதுதவிர மகளிர்  ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களுடன் சேர்த்து 4 முறை ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்று அசத்தியவர். 40 வயதாகும் செரீனா தனது டென்னிஸ் வாழ்க்கையில் 319 வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தவர். 

கடைசியாக இவர் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் செரீனா முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். 

இந்நிலையில், அடுத்து நடக்கவுள்ள அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கவுள்ள செரீனா, அதன் பிறகு டென்னிஸ்ஸில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். 

 இனி வரும் நாட்களை தனது குடும்பத்திற்காக செலவழிக்க விரும்புவதாக செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com