0,00 INR

No products in the cart.

கலர்ஃபுல் பிரபஞ்சம்; நாசா புகைப்படம் வெளியீடு!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆராய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நிறுவியிருந்தது. இத்தொலைநோக்கி முதன்முதலாக படம்பிடித்த பிரபஞ்சத்தின் வண்ணப் படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலையில் வெளியிட்டார்

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒளிக் நட்சத்திரங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது. நாசாவில் முதலில் நிறுவப்பட்ட ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக, சென்ற வருடம் சுமார்  10 பில்லியன் டாலர் செலவில் இந்த ஜேம்ஸ் வெப் நிறுவப்பட்டது. இந்த தொலைநோக்கி மூலம் வானில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நட்சத்திரங்களையும் மனிதர்கள் வாழத்தக்க கிரகங்கள் உண்டா என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டன. 

அந்த வகையில் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரபஞ்சம் தோன்றியபோது உருவான ஒளிச் சிதறல்களை இந்த தொலைநோக்கி துல்லியமாக படம்பிடித்துள்ளது. இந்தத் தொலைநோக்கி எடுத்த மேலும் பல படங்களை நாசா இன்று வெளியிடவிருக்கிறது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு!

0
நாட்டின் 14-வது புதிய குடியரசுத் துணைத்  தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பொறுப்பேற்கிறார். - இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கைய நாயுடுவின்...

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

0
காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில்...

ரஜினிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6-ம்  தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து பிரதமர் அலுவலக...

இன்று ரக்ஷா பந்தன்: நாடெங்கும் கொண்டாட்டம்!

0
ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். அந்த வகையில் இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு, அவரின்...

போதைப் பொருள் எதிர்ப்பு : பள்ளிகளில் இன்று உறுதிமொழி!  

0
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளான இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான உறுதிமொழியை இன்று காலை 10.30 மணிக்கு எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. -இது குறித்து தமிழக...