0,00 INR

No products in the cart.

‘இந்த வெற்றி என் மனைவிக்கு சமர்ப்பணம்’; சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா!

ஐபிஎல் 15-வது சீசனின் 22-வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே-வுக்கு கிடைத்த முதல் வெற்றி இது! இதற்கு முன்னதாக இந்த சீசனில் நான்கு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது.

இந்நிலையில் நேற்றைய வெற்றிக்குப் பின் சிஎஸ்கே அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறியதாவது:

ஒரு கேப்டனாக நான் பெற்றுள்ள இந்த முதல் வெற்றியை எனது மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த நான்கு போட்டிகளில் தோல்வியுற்ற சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்துள்ளோம். இதற்குக் காரணம் எங்கள் அணியின் ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபேவின் அற்புதமான பேட்டிங்தான்! மேலும் எங்கள் அணியின் உரிமையாளர்களும் நிர்வாகமும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். மேலும் தோனி உடபட எங்கள் டீமின் மூத்த வீரர்களிடம் ஆலோசனை கேட்பேன். எங்கள் அணியில் அனுபவம் அதிகம் உள்ளது. இனிவரும் போட்டிகளில் பாசிட்டிவ் மனநிலையில் ஆட்டத்தை அணுகுவோம்.

-இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.

இந்தப் போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். அதோடு கடைசி நேரத்தில் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை கொடுத்து வந்த தினேஷ் கார்த்திகை பவுண்டரி லைனில் அற்புதமான கேட்ச் பிடித்து வெளியேற்றியிருந்தார் ஜடேஜா.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி: அபிலாஷா பராக்!

0
இந்திய விமானப் படையில் இணைந்த  முதல் பெண் போர் விமானி என்ற பெருமை பெற்றுள்ளார் அபிலாஷா பராக். இந்திய ராணுவத்தின்  விமானப் படையில் இதுவரை போர் விமானிகளாக பெண்கள் யாரும் பணிபுரியாத நிலையில், முதன்முறையாக...

சீனர்களுக்கு விசா வாங்கிய வழக்கு: டெல்லி சிபிஐ-யில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்!

0
மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263...

காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை; தீவிரவாதிகள் கைவரிசை!

0
காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான அம்ரீன் பட் (35). என்ற பெண்மணி நேற்றிரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீன் பட், கடந்த இரண்டு வருடங்களாக டிக் டாக் மூலம்...

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

0
பிரதமர் மோடி நாளை (மே 26) தமிழகம் வருகை தரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  -இதுகுறித்து பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: மதுரை -...

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது: வங்கக்கடலில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்  வெப்பசலனம்...