ராகுலுக்கு ஆதரவாக  சத்தியாகிரக யாத்திரை! 

ராகுலுக்கு ஆதரவாக  சத்தியாகிரக யாத்திரை! 

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு பங்குகளை விற்றதில் முறைகேடு செய்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகும் நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக யாத்திரை என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் நஷ்டம் காரணமாக 2008-ல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு விற்கப் பட்டது. இந்த யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா காந்தி, ராகுலுக்கு 76%, பங்குகளும் மீதமுள்ள 24% பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகத் தொடங்கியது.

இந்நிலையில் ரூ .2 ஆயிரம் கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோனியா காந்தி உடல்நலக் குறைவால், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதையடுத்து ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலுக்கு ஆதரவாக திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்குப்தட்டம் நிலவுவதால் போலிஸ் குவிக்கப் பட்டுள்ளது. மேலும்  

சத்தியாகிரக யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளதால் ஆங்காங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com