நாளை முதல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி!

நாளை முதல் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி!

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் இலவச பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

நாடு முழுவதும் 18 வயது முதல் 59 வயது வரையில் உள்ளவர்களுக்கு நாளை (ஜூலை 15)  தொடங்கி 75 நாட்கள் வரை சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும்.

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்

இந்நிலையில், 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு நாளை முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com