தமிழக சட்டமன்றம்; புது அம்சங்களுடன் நாளை பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டமன்றம்; புது அம்சங்களுடன் நாளை பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டப் பேரவை நாளை கூடவுள்ள நிலையில், முதல் நாளிலேயே 2022 – 2023க்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்ததாவது:

தமிழக சட்டப்பேரவை  பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கப்படவுள்ளது. இதில் இந்த நிதியாண்டுக்கான மாநிலத்தின் வரவு, செலவு திட்ட அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளாா். கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடுதிரை உதவியுடன் கணினி முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கவுள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பேரவை கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கேள்வி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகும். படிப்படியாக பேரவையின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தொடரின் 2-ம் நாள் வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பொது மக்கள், விவசாயிகள், வேளாண் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு வேளாண் நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2022-2023-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை,  2021-2022-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கைகள் ஆகியன 24-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com