ஜெலன்ஸ்கி பெயரில் டீத்தூள்; அசாம் நிறுவனம் புதுமை அறிமுகம்!

ஜெலன்ஸ்கி பெயரில் டீத்தூள்; அசாம் நிறுவனம் புதுமை அறிமுகம்!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 'அரோமட்டிக் டீ' என்ற நிறுவனம், உக்ரைன் அதிபர் பெயரில் 'ஜெலன்ஸ்கி' என்ற டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரஞ்சித் பருவா கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது அனைவருக்கும் தெரியும். அந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி துணிச்சலாக எதிர்கொண்டு திறமையாக சமாளித்து வருவது உலக நாடிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் துணிச்சலையும், வீரத்தையும் கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் டீத்தூளை அறிமுகம் செய்கிறோம்.

உக்ரைனில் ஜெலன்ஸ்கியை தப்பிக்க செய்வதாக அமெரிக்கா விடுத்த அழைப்பை கூட அவர் நிராகரித்து விட்டார். அதற்கு பதிலாக ரஷ்யாவுக்கு எதிராக போராடும் வகையில் தனது நாட்டுக்கு ஆயுதங்கள் தருமாறு அமெரிக்காவுடம் அவர் கூறினார். இது அவரது பாசிட்டிவான குணநலனை காட்டுகிறது. வெற்றி என்பது அருகில் இல்லை என்பது நன்கு தெரிந்தும் அவர் இன்னும் தம் நாட்டுக்காக போராடுகிறார். அந்த வகையில் எங்கள் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பான தேயிலைத்தூளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். இந்த டீத்தூள் ஆன்லைனில் கிடைக்கும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com