ஆம் ஆத்மி தலைமை காங்கிரஸ் ஏற்கும்; ப.சிதம்பரம் அதிரடி!

ஆம் ஆத்மி தலைமை காங்கிரஸ் ஏற்கும்; ப.சிதம்பரம் அதிரடி!

நாட்டில்  2024-ல் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில், தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தையடுத்து, அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ப. சிதம்பரம் தெரிவித்ததாவது;

ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தத் தேர்தல் தோல்விக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் மட்டுமே பொறுப்பாகாது. காங்கிரசில் நாங்கள் ஆகஸ்டில் தேர்தல் நடத்தி கட்சியின் நிரந்தரத் தலைவரை அறிவிப்போம். அதற்குள் கட்சியில் பிளவு ஏதும் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். இது மேற்குவங்கத்தில் மம்தாவுக்கும் பொருந்தும். டெல்லியில் கேஜ்ரிவாலுக்கும் கூட பொருந்தும். ஒவ்வொரு மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். அந்தவகையில் வருகிற நாடளுமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையை காங்கிரஸ் ஏற்று செயல்பட்டு, பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.

-இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com