டெல்லி ஜகாங்கிர்புரி; ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்ற உச்சநீதிமன்றம் தடை!

டெல்லி ஜகாங்கிர்புரி; ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்ற உச்சநீதிமன்றம் தடை!

டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல்16) நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பிலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற டெல்லி வடக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு 9 புல்டோசர்கள் மூலம் வீடுகள், கடைகளை அகற்றப்பட்டன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜகாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நிதிபதிகள் தெரிவித்ததாவது;
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

-இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டு இதுதொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என தள்ளி வைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com