137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு!

137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு!

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை இன்று முதல்  லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ. 50 அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. அதையடுத்து தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, ரூ.102.16 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.19 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் விளைவாக இந்த மாத தொடக்கத்தில் உலக கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் ஒன்றுக்கு ரூ. 110 டாலர்களாக உயர்ந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல்  விலை நான்கு மாதங்களுக்கும் மேலாக மாறவில்லை. இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்து, ரூ. 967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பெட்ரோல் டீசல் விலை,  மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com