முடிவெடுத்தால் முதல்வர்தான்: நடிகர் விஜய் போஸ்டரால் பரபரப்பு!

முடிவெடுத்தால் முதல்வர்தான்: நடிகர் விஜய் போஸ்டரால் பரபரப்பு!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் முடிவெடுத்தால் அவர்தான் முதல்வர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டியிட்டு, சில வார்டுகளில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த போஸ்டரில் ''முடிவு எடுத்தால் முதல்வர் தான்'' என்றும், மற்றொரு போஸ்டரில் 2026-ல் தளபதி முதல்வர் என நடிகர் விஜய் படத்தையும், அவரது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் படத்தையும் அச்சிட்டு ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com