‘மிஸ்டர் ஆசியா’ போட்டி;  மாஸ்டர் ரத்தினத்துக்கு வெள்ளி!

‘மிஸ்டர் ஆசியா’ போட்டி;  மாஸ்டர் ரத்தினத்துக்கு வெள்ளி!

மாலத்தீவில் நடைபெற்ற ஆசிய அளவிலான மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டியில் மதுராந்தகத்தை சேர்ந்த மாஸ்டர் ரத்தினம் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரை சேர்ந்த மாஸ்டர் ரத்தினம் (72), உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார்.இவர்ற்கனவே மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான மிஸ்டர் ஆசியா போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றார்

இதனை தொடர்ந்து, மதுராந்தகம் நகரம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து தனது வெள்ளிப் பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com