இபிஎஸ் மீது டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை! 

இபிஎஸ் மீது டெண்டர் முறைகேடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை! 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையில் 4,800 கோடி ரூபாய்க்கு டெண்டர் முறைகேடு செய்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கின் மீதான விசாரணை இன்று நடக்கவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தபோது, தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தனக்கு வேண்டியவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

எடப்பாடி மீதான இந்த டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா பெஞ்ச் முன்பு தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆஜராகி இந்த விவகாரம் குறித்து வாதிட்டனர்.

இந்நிலையில தமிழக நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீதான இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக 15-வது வழக்காக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com