பெருங்குடி குப்பைக் கிடங்கு; 2 நாட்களாகப் பரவும் பெரும் தீ!

பெருங்குடி குப்பைக் கிடங்கு; 2 நாட்களாகப் பரவும் பெரும் தீ!

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும்  தீயை அணைக்க இன்று 2-ம் நாளாக தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். சுற்றிலும்- கரும்புகை சூழ்ந்துள்ளதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து  தீயணைப்புத்துறை அதிகாரி சையது முகமது தெரிவித்ததாவது;

சென்னை மாநகாராட்சியின் பெருங்குடி குப்பைக் கிடங்கில் நேற்று (ஏப்ரல் 27) மாலை 3 மணியளவில் திடீரென  தீ பற்றியது . கிடங்கின் நுழைவுவாயிலில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் இடம் அருகே  பற்றிய தீ , மளமளவென கிடங்கின் உட்புறம் வரை பரவியது. இதனால் கிடங்கில் மலை போல தேங்கிகிடந்த குப்பைகள் தீயினால் கருகி சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன.

அதிலிருந்து தொடர்ந்து வெளியேறும் கரும்புகை  அப்பகுதி முழுவதும் சூழ்ந்து புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. இன்று 2-வது நாளாக அத்தீயினை அணைக்க தீயணைப்பு வீரர்களும் , மாநகராட்சி பணியாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயணைக்கும் பணியில் 8 தீயணைப்பு வாகனங்கள்  ஈடுபட்டுள்ளன. ஆனால்  கரும்புகை சூழ்ந்துள்ளதாஉம், காற்றின் வேகமும் புகைமூட்டமும்  அதிகமாக இருப்பதால் தீயினை கட்டுப்படுத்துவதில் சவால் ஏற்பட்டுள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கிடங்கில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த்ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பேசிய துணைமேயர் மேயர் மகேஷ்குமார் தெரிவித்ததாவது:

பெருங்குடி  கிடங்கில் ஏற்பட்ட தீ மேற்கொண்டு பரவாதவாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு அருகில் உள்ள சதுப்புநிலத்திற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரரகள் திற்மையாக தடுத்துவிட்டனர். இன்னும் சில மணி நேரங்களில் தீ முழுமையாக அணிக்கப்பட்டு, கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 5000 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அதில் சுமார் 2400 டன் குப்பைகள் பெருங்குடி கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com