வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம்!

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம்!

வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் பன்டிகையை முன்னிட்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் கே. ஜெயின் கலந்து கொண்டார்.

இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏறப்பட்டுள்ளது.  சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அனைத்து மாணவர்களும் சரிசமமாக கருதப்படுகின்றனர். அந்த அடிப்படையில்தான் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியை மாணவர்கள் தான் ஏற்பாடு செய்தனர். துணைவேந்தர் ஒருங்கிணைக்கவில்லை. எனவே, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புறைகளுக்கு செல்ல வேண்டும்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சிலர் கூறியதாவது;

இதுவரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. இப்போது இதற்கான செலவையும் பல்கலைக்கழகமே ஏற்றிருக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே இப்படி நடந்துள்ளது. துணைவேந்தர் இதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com