இன்று #WorldNoTobaccoDay; புகையிலையை ஒழிக்க பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை!

இன்று #WorldNoTobaccoDay; புகையிலையை ஒழிக்க பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை!

இன்று புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டில் புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கக்கோரி  மத்திய மற்றும்,மாநில அரசுகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

-இதுகுறித்து ந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர்பக்கத்தில் குறிப்பிட்டதாவது:

"இன்று #WorldNoTobaccoDay  உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புகையிலை: சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த  அச்சுறுத்தல் விளைவிக்கும் (Tobacco:Threat to our environment) என்பதை இந்நாளின் நோக்கமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உடல்நலக் கேடு மட்டுமின்றி விவசாயம், உற்பத்தி, விநியோகம், குப்பை என அனைத்திலுமே புகையிலை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உலகில் 80 லட்சத்திற்கும் கூடுதலான உயிர்களை புகையிலை காவு வாங்குகிறது.

புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 8.40 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் விடப்படுகிறது. புகையிலை சாகுபடிக்காக நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்படுகிறது! தமிழ்நாட்டில் புகையிலையால் மட்டும் ஆண்டுக்கு 8000 டன் குப்பைகள் சேருகின்றன. புகையிலை நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் மனிதர்களைக் கொல்கிறது.

புகைப்பவர்களை விட அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்! அதனால் தான் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பொது இடங்களில் புகைப்பதை தடை செய்தேன். ஆனால்,இப்போது புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com