0,00 INR

No products in the cart.

கலையரசி அருள்பெற்ற இசையரசிக்கு கொலுவில் கவுரவம்!

பேட்டி: எஸ்.கல்பனா,

படங்கள்: ஶ்ரீஹரி.

 

கலைகளுக்கு அரசியான அந்த சரஸ்வதி தேவிக்கு மானுட வடிவம் கொடுத்தால், நம் மனக்கண்ணில் எம்.எஸ் அம்மாதான் தோன்றுகிறார். அதனாலேயே இந்த வருட கொலுவுக்கு ‘தீம்’ சப்ஜெக்டாக அவரது வாழ்க்கையை எடுத்து கொண்டோம்’’ என்கிறார் ரத்னா. சன் டி.வி செய்தி வாசிப்பாளரான ரத்னா எவ்வளவுக்கு பிரபலமோ, அதே அளவு அவர் வீட்டு கொலுவும் பிரசித்தம்.

சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அவரது வீட்டில் ஒவ்வொரு வருடமும் சம்பிரதாய கொலுவுடன் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தீம் கொலுவும் உண்டு. அந்த வகையில் இந்த வருட கொலுவுக்கு அவர் எடுத்து கொண்ட தீம் – இசைப் பேரரசி எம்.எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறு!

‘’இதுதான் தீம்னு முடிவானதும், 3 மாசத்துக்கு முன்னாலேயே இதற்கான தயாரிப்பு வேலைகள் ஆரம்பிச்சுட்டோம். அவரது வாழ்க்கையை 11 கட்டங்களா பிரிச்சு, அவை ஒவ்வொன்றுக்கும் கட்-அவுட்கள், படங்கள் தயார் பண்ண ஆரம்பிச்சோம்’’ என்றார் ரத்னா.

எம்.எஸ். அம்மா, சதாசிவம் அவர்கள் உருவங்களை தெர்மாகோல் பொம்மைகளாக உருவாக்கினாராம். பின்னணியில் அந்தந்த காட்சிகளுக்கான படங்கள், மோல்டுகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

வாருங்கள் கொலு பார்க்கப் போவோம்..

காட்சி – 1

 

எம்.எஸ் சுப்புலட்சுமியம்மா 1916 செப்டம்பர் மதுரையில் சண்முகவடிவு அம்மாளின் மகளாகப் பிறந்தார். அவரின் அசாத்திய இசைத்திறமையை உணர்ந்த சண்முகவடிவு அம்மாள், அவருக்கு முறையாக இசைப்பயிற்சி அளிக்கத் தொடங்கினார். மதுரை மேல அனுமந்தராயன் கோயில் தெருவிலிருந்த அந்த வீட்டை அப்படியே கண்முன் நிறுத்துகிறது கொலு காட்சி!

காட்சி – 2:

இதையடுத்து 1932-ல் எம்.எஸ் கும்பகோணம் மகாமகத்தில் பாடிய காட்சி! இதில் சிறுமியான எம்.எஸ் தன் இனிய குரலில் பாடியதைக் கேட்டு, அங்கு குழுமியிருந்த இசையுலக ஜாம்பவான்களும் ரசிகர்களும் பிரமித்துப் போயினர். வித்வான் மகாராஜபுரம் சந்தானம்,தனக்கு அளிக்கப் பட்ட விருதை சிறுமி எம்.எஸ்-சுக்கு அளித்துப் பாராட்டினார். பின்னர் சென்னை மியூசிக் அகாடெமியில் பகல்நேரக் கச்சேரி செய்யும் வாய்ப்பு எம்.எஸ்-சுக்கு கிடைத்தது..

காட்சி -3:

எம்.எஸ்.சுப்புலட்சுமி – சதாசிவம்ஜோடிக்கு திருநீர்மலையில்1940 ஜூலை10-ம் தேதி நடந்த திருமணக் காட்சி!

காட்சி -4:

1941-ம்ஆண்டு `சாவித்ரி’ படத்தில் ஆண்வேடமேற்றுநாரதராகநடித்து, அதில் 7 பாடல்களும் பாடியிருந்தார் எம்.எஸ் அவர்கள். இந்த படத்திற்கு அவருக்கு கிடைத்த தொகையில் தொடங்கப்பட்டது `கல்கி’ பத்திரிகை. 1941-ம்ஆண்டு, காந்திவந்துதங்கியவீடுஎன்றஒரேகாரணத்துக்காகஸ்லேடன்கார்டன்ஸ்என்றபிரமாண்டவீட்டைவாங்கினார்சதாசிவம். அந்த கல்கி கார்டன் வீட்டின் தரைதளத்தில் `கல்கி’ அலுவலகமும், மாடியில் அவர்கள் வசித்த இல்லமும் விளங்கின. மகாத்மா காந்தி மட்டுமல்ல.. பின்னர் நேரு, ராஜாஜி, சரோஜினிநாயுடுஎன அரசியல் தலைவர்கள் வந்திருந்து சிறப்பித்த வீடு என்ற பெருமையும் கொண்டது.

காட்சி – 5:

1945-ம்ஆண்டு எம்.எஸ் அம்மா நடித்த ‘மீரா’ திரைப்படக் காட்சி! . , எல்லிஸ்ஆர்.டங்கன்இயக்கத்தில்அவர் அந்த படத்தில் பக்தமீராவாகவே வாழ்ந்திருப்பார். அதில் அவர் பாடிய `காற்றினிலேவரும்கீதம்’ இன்றளவும் அனைவர் மனதையும் உருக்குகிறது. இந்த படத்துக்குப் பிறகுதிரைத்துறையிலிருந்துவிலகி மேடைக்கச்சேரிகள் மட்டுமே செய்யத் தொடங்கினார் எம்.எஸ் அம்மா.

காட்சி – 6:

திருப்பதி ஏழுமலையானுக்கு எம்.எஸ் அவர்கள் பாடிய வெங்கடேசசுப்ரபாதம்ஒலிநாடா 1963-ம்ஆண்டு வெளியானது. 1968-ம்ஆண்டுசென்னைமியூசிக்அகாடமிவழங்கிய`சங்கீதகலாநிதி’ விருதைப்பெற்றமுதல்பெண்கலைஞர்என்றபெருமைஎம்.எஸ்ஸைச் சேரும். மேலும் பாரதரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர், ஐ.நா பொதுச்சபையில் பாடிய முதல் இந்திய இசைக் கலைஞர் என்ற பெருமைகளும் அவருக்கு உண்டு.

காட்சி – 7:

ஐ.நா பொதுக்குழுவில் 1966 அக்டோபர் 23 அன்று பாடினார் எம்.எஸ். அதில் காஞ்சிப் பெரியவர் உலக அமைதிக்காக எழுதிக் கொடுத்து, எம்.எஸ் அவர்கள் பாடிய `மைத்ரீம் பஜத’ பாடல் அவருக்கு உலகப்புகழ் கிடைக்கச் செய்தது. இதன்பிறகு கார்னெகி ஹால், லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால், மற்றும் மாஸ்கோவிலும் பாடினார் எம்.எஸ்.

தன் கணவர்சதாசிவம்1997 நவம்பர்21-ல் காலமானதைத் தொடர்ந்து, இந்த இசைக்குயில் தன் இசையை நிறுத்திக்கொண்டது. 1998-ல் `பாரதரத்னா’ விருது எம்.எஸ் அம்மாவுக்கு வழங்கப்பட்டது.

மொத்தத்தில் எம்.எஸ் என்கிற இசை சகாப்தத்தை 3-டி காட்சிகளாக கண்முன் நிறுத்தி விட்டார் ரத்னா.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...