0,00 INR

No products in the cart.

கொஞ்சம் சிரிங்க பாஸ்

வாசகர் ஜோக்ஸ்                                                       ஓவியம் : ரஜினி

 

“எதைச் சொல்லி  கடன் கேக்கறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமல் போயிடுச்சே?”

“என்ன சார் விஷயம்?”

“குடும்பத் தலைவி உரிமைத்தொகை  வந்ததும் குடுத்துடறேன், ஒரு
ஆயிரம் கை மாத்தா குடுங்கன்னு கேக்கறான்யா…!”

– வி. ரேவதி, தஞ்சை

“ராணியைப்  பார்த்தாத்தான்  ரொம்ப  பயமா இருக்குதா? என்ன  சொல்றீங்க மன்னா?”

“எதிரி மன்னனைப் பார்த்தா  கால் ஓட ஆரம்பிச்சிடுது…ராணியப் பார்த்தா  காலும் கையும் ஓட மாட்டேங்குது அமைச்சரே!”

– பி.ஜி.பி.இசக்கி, சென்னை

“நம்ப ஆட்சிய கலைக்க ரூபாய் 2000 கோடி வரைக்கும் செலவு பண்ண
எதிர்க்கட்சிகாரங்க ரெடி ஆயிட்டாங்க தலைவா!”

“அந்தத் தொகையை நம்பகிட்ட
கொடுத்தா நாமளே பதவி
விலகிடுவோமேய்யா!”

– வி. ரேவதி, தஞ்சை

  “காபியில   சர்க்கரை  போட  மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்!”

  “நீங்கதானே சார் வெறுங்காபி போதும்னு சொன்னீங்க!”

– வி. ரேவதி, தஞ்சை

“பில்லைப் பார்த்தாலே ‘ஷாக்’ அடிக்குதுன்னு சொல்றாங்க டாக்டர்.”

“அப்போ  ‘ஷாக் ட்ரீட்மென்ட்’  சார்ஜையும்  பில்லில்  சேர்த்துவிட  வேண்டியது தான்!”

– ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்

“அழகான இளம் பெண் ஒருத்தியை ‘இவள் என் மனைவி’ என்று இரு வாலிபர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள் மன்னா, என்ன செய்யலாம்?”

“அவளை  ‘இரண்டாக  வெட்டி  ஆளுக்கொரு  பாதி  தரவா’  என்று  கேளுங்கள்… ‘சரி’  என்று சொல்பவன்தான் உண்மையான கணவன்!”

– வி.ரேவதி, தஞ்சை

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...