0,00 INR

No products in the cart.

பொண்ணுங்க மனசு கஷ்டப்பட்டா நான் தாங்க மாட்டேன்.

நேர்காணல்

– ராகவ்குமார்

 

“சார் இது அடல்ட் காமெடி படம் தான் “கண்டிப்பா தப்பான படம் கிடையாது. சொன்ன புரிஞ்சுகோங்க “என்று பத்தாவது முறை அடித்து சொல்கிறார்” வெங்கட் பிரபு. ‘மாநாடு’ தந்த வெற்றியே இன்னமும் பேசப்பட்டு கொண்டிருக்க அதற்குள் சைலன்ட்டாக ‘மன்மத லீலை’ என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார். இது அடல்ட் காமெடி வகை படம் என்பது ஒரு புறம் இருக்க, ‘A வெங்கட் பிரபு மூவி’ என்ற வார்த்தையில்  ‘A’ என்பதை அடைப்பு குறிக்குள் காட்டியுள்ளார்கள். “எல்லா ஆண்களும் ராமர்கள்தான் மாட்டிகொள்ளாதவரை” என்ற வாசகம் வேறு ட்ரைலரில் வருகிறது. உண்மையில் ‘மன்மதலீலை‘ என்ன மாதிரியான படம் என்பதை அறிய வெங்கட் பிரபுவை சந்தித்தோம்.

‘மாநாடு’ தந்துவிட்டு ஏன் அடல்ட் காமெடி பக்கம் சாய்ந்து விட்டீர்கள்?

“நாம் அனைவருமே சமீபகாலத்தில் பல துன்பங்களை சந்தித்துவிட்டோம். கொரோனா காலத்தில் பல உறவுகளை இழந்துவிட்டோம். இந்த இறுக்கமான சூழ்நிலையில் அனைவருக்கும் பிடித்த ஜனரஞ்சகமான படம் தர விரும்பினேன். மேலும் அடல்ட் காமெடி வகை படங்கள் தமிழில் குறைவு. எனவே இதை செலக்ட் செய்தேன். பாக்யராஜ் சாரின் எத்தனையோ படங்களில் அடல்ட் காமெடி கன்டென்ட் இருக்கும். அதை இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றார்போல சொல்லிருக்கிறேன்.”

இதன் ஒன் லைன் என்ன?

“இந்தப் படத்தைப் பார்க்கும்போது  ஹீரோ அசோக் செல்வன் செய்யும் ஒரு தவறு திருமண வாழக்கையை எவ்வாறு பாதிக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். இப்படத்தை நீங்கள் திரையில் பார்க்கும்போது,  நாம் செய்த தவறோ அல்லது நமக்கு தெரிந்தவர் செய்த தவறோ நினைவுக்கு வந்து செல்லும். இது அடல்ட் காமெடியாக இருந்தாலும் எடுத்துகொண்ட விஷயம் சீரியஸானது.”

ஜாலியான கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புவை ‘மாநாடு‘ என்ற வித்தியாசமான ரோலில் நடிக்க வைத்தீர்கள், அசோக் செல்வனை ஜாலி பாத்திரத்தில் நடிக்க வைக்கிறீர்கள். ஏன் இந்த மாற்றம்?

“ஒரு நடிகன் என்றால் எந்தவித கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க வேண்டும். அப்போதுதான் திறமையை வெளிக்கொணர முடியும். அசோக் எந்தவித கேரக்டரிலும் நடிக்க ரெடியாக உள்ளார். அசோக் செல்வனை இந்தக்கால ஜெமினி கணேசன் என்றுகூட சொல்லலாம். ஹீரோவான அஜீத் சாரை மங்காத்தாவில் வில்லனாக காட்டினேன். நடிகர்கள் வேறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்தால்தான் திறமை வெளிபடும்.”

உங்கள் மன்மதலீலை  படத்தை குழந்தைகளுடன் பார்க்க முடியுமா?

“குழந்தைகளுடன் பார்க்க கூடாது என்பதற்காகத்தான் A சர்டிபிகேட் தந்து இருக்கிறார்கள். இந்த கேள்வியே தவறானது. இந்த படத்தை குழந்தைகள் இல்லாமல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்கலாம். தோழர்கள், தோழிகள் சேர்ந்து பார்க்கலாம், தனித்தனியாகவும் பார்க்கலாம். முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் கண்டிப்பாக இருக்காது.சஸ்பென்ஸ் திரில்லர், ஆக்ஷன், ரொமான்ஸ் போலவே அடல்ட் காமெடி வகை படங்கள் மேலை நாடுகளில் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இவ்வகை படங்கள் வந்து கொண்டிருக்கிறது. தமிழுக்கு இவ்வகை புதிது என்பதால் இத்தனை சந்தேகங்கள்.”

இப்படத்தை கமல் சாரிடம் போட்டு காண்பித்தீர்களா?

“இன்னமும் இல்லை. பார்த்தால் கண்டிப்பாக பாராட்டுவார் என்று  நம்புகிறேன்.”

மகனின் மன்மத லீலைக்கு அப்பா கங்கை அமரனின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?

அப்பா படத்தை பார்க்க என்னை விட ஆர்வமாக  இருக்கிறார். அப்பா இப்படத்தில் பாடல்கள் எழுதி இருக்கிறார். உடலுக்கு வயதானாலும் தனது எழுத்துகளுக்கு வயது இல்லை என்பதை இப்படத்தின் பாடல் வரிகளில் நிரூபித்து உள்ளார் அப்பா.

பிரேம்ஜி மியூசிக் பிளே பாய் என்று டைட்டிலில் போட்டு உள்ளாரே?

அது ஏனோ அவரின் விருப்பம் அதனால் போட்டு கிட்டார். பிரேம்ஜி படப்பிடிப்பு தளத்திற்கு  வரவேயில்லை. ஸ்டூடியோவில் உட்கார்ந்து கிட்டே மியூசிக் போட்டுகிட்டு இருந்தார். சும்மா சொல்லக்கூடாது மன்மதலீலைக்கு ஏற்ற இசை லீலையை படத்திற்கு அமைத்து தந்துருக்கார் பிரேம்ஜி.

சம்யுக்தா, ரியா சுமன், ஸ்ம்ருத்தி இந்த மூன்று ஹீரோன்களை பற்றி சொல்லுங்களேன்?

இந்த மூன்று பேரையும் எனக்கு பிடிக்கும். கிளாமர், நடிப்பு என பின்னி எடுக்கறதுல ஒருத்தரை விட ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை. ஒருத்தரை பத்தி சொன்னா இன்னோரு பொண்ணு மனசு கஷ்டப்படும். பொண்ணுங்க மனசு கஷ்டப்பட்டா நான் தாங்க மாட்டேன். உண்மையில் பெண்கள் இல்லாமல் மன்மதனுக்கு வேலை இல்லை. மன்மதலீலை தலைப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த பொண்ணுங்கதான்.

 

 

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...