0,00 INR

No products in the cart.

பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடைகள் அல்ல!

தலையங்கம்

 

ல்கலைகழங்கங்களின் பட்டமளிப்பு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களால் நிகழ்த்தப்படும் உரைகள் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க தகுந்தவையாக இருந்த காலம் ஒன்று உண்டு. நேரு, இராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள், தங்கள் பணிகளுக்கிடையே இந்த உரைகளை தயாரிக்கவென்று நேரம் ஒதுக்கி சிறப்பாக தயாரித்து விழாவில் உரையாற்றுவார்கள். அப்துல் கலாம் தன் உரையை பட்டதாரிகளுக்கு அச்சிட்டு வழங்க  வசதியாக   முன்னதாகவே அனுப்பிவைப்பார்.  இம்மாதிரி உரைகள் இன்றளவும் இலக்கிய மதிப்போடு நினைவுகூரப்படுகின்றன

ஆனால், இன்று  பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடையாகிக் கொண்டிருக்கின்றன.  அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாக்கள் இரண்டும் கல்வித் துறைக்கு வெளியே அரசியல் வெளியிலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரும், உயர் கல்வித்துறை அமைச்சரும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரது உரைகளும் கருத்து முரண்களை விவாதிக்கும் களமாக விழா மேடையை மாற்றிவிட்டன. “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும்” என்று தமது உரையில் குறிப்பிட்டார் உயர் கல்வித்துறை அமைச்சர், “மொழித் திணிப்பை எதிர்க்கிறோமேயன்றி எந்தவொரு மொழியையும் விருப்பத்துடன் படிப்பதை எதிர்க்கவில்லை” என்பதை  தெளிவுபடுத்தினார் உயர் கல்வித் துறை அமைச்சரை.

அடுத்துப் பேசிய ஆளுநர், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று பதிலளித்தார்.

அதேபோல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில்  முதல்வரின் பட்டமளிப்பு உரைக்கு  முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “கல்வியையும் சுகாதாரத்தையும் இரு கண்கள் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி என்பது மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதையும் ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்” என்று பேசினார்.

அடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,   “கல்விதான் பெரும் சொத்து. இதனை யாரும் பிரிக்க முடியாது. அதனால்தான் காமராஜரின் காலத்தை பொற்காலம் என்கிறோம். கலைஞரின் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதுபோல என்னுடைய ஆட்சிக்காலம் உயர்கல்வியின் பொற்காலமாக உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், “பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

மொத்தத்தில் பட்டங்கள் பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு வாழ்த்துகளோ,  ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள,  நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பட்டங்களின் மூலம் பெற்ற கல்வியறிவைப் பயன்படுத்தி பாடுபடவேண்டும் போன்ற  அறிவுரைகளோ வழங்கப்படவில்லை.

அரசமைப்பின் முக்கியமான பொறுப்புகளை ஏற்றிருப்பவர்கள் தங்களுக்கு இடையேயான ஓர் அரசியல் விவாதத்துக்குப் பட்டமளிப்பு விழாவைப் பயன்படுத்துவது தவறு என்பதை உணர்ந்து வருங்காலங்களிலாவது தவிர்க்கவேண்டும்.

3 COMMENTS

  1. நாம் ஒரு இடத்திற்கு புறப்படும் பொழுது எதற்காக,? எந்த விஷயத்திற்காக போகிறோம் என்று உள்வாங்கி கொண்டால்
    உளரல் பேச்சுக்கே இடமிருக்காது .என்று உணர்த்தியது தலையங்கம்

    Janakiparanthaman ___ COIMBATORE __ 3 6 , phone __ _9O47588922

  2. தலையங்கத்தின் மூலம் பட்டமளிப்பு விழாவில் நடக்கும் மாற்றங்களை பற்றி
    அறியமுடிந்தது.பட்டத்தாரிகளின் கல்விநிலை அங்கே மதிக்கப்படவில்லை.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...