0,00 INR

No products in the cart.

அடுத்தது மாநகராட்சி தேர்தல் வரப்போகிறது

முகநூல் பக்கம் 

 

க்டோபர் மாதம் ஆறாந்தேதி சென்னை OMR சாலையில் உள்ள ஒரு பள்ளியில் தேர்தல் பணி.

என்னதான் நவீன தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இருந்தாலும் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் ஏழுமலை ஏழுகடல் தாண்டி பிறகு சுற்றிக்கொண்டு கிளம்பின இடத்தில் வந்து இறங்க வேண்டியது மாதிரியானவை.

நீங்கள் என்னதான் எலைட் பீப்பிளாக (நானும் இந்த வார்த்தையை இன்னிக்கு எழுதிட்டேன்) இருந்தாலும் அன்றொரு நாள் நீங்கள் கண்டுகொள்ளப்படாத சல்லிதான்.

ஐந்தாம் தேதி மாலை கடும் மழை… கும்மிருட்டு… தேர்தல் பணி நடைபெறப் போகும் பள்ளியில் ஏகப்பட்ட பூத்கள். அத்தனையிலும் பெரும்பான்மை பெண்கள். அவர்களை அழைத்து வந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பாடுகள் நடைபெற்றன. கொரோனாவால் திறக்கப்படாத பள்ளிகளின் கவலைக்கிடமான வகுப்பறைகளை நாங்களே நகர்த்தி துடைத்து உட்கார இடம் செய்து கொண்டோம்.

கழிப்பறை பிரச்னை இருட்டில் மழையில் செல்ல பயம். எங்கே வழுக்கும் என்று சொல்ல முடியவில்லை. எல்லோரும் கேட்டுக்கொண்டதன் பேரில் தொலைவில் ஒரு விளக்கு போட்டார்கள். அப்படியும் இருட்டுத்தான். அவரவர் செல்போன் டார்ச் துணையால் சென்றோம்.

நாங்கள் இருந்த வகுப்பறையில் CCTV camera பொறுத்தப்பட்டு விட்டதால் மறுநாள் உடை மாற்றிக்கொள்ளக்கூட முடியவில்லை. இதில் விடியலில் பெண்கள் மஹாலய அமாவாசை நாளென்பதால் தலைக்குக் குளித்து ஏதோவொரு இருட்டு ஸ்டோர் ரூமை தேடி செல்போன் வெளிச்சத்தில் உடைமாற்றிக் கொண்டோம்.

முதல்நாள் மாலை அருமையானதொரு டீ,பிறகு தோசை. மறுநாள் காலை ஒரு டீ. இவைதான் ஆகாரம். அதற்கப்புறம் எங்களுக்கு அளிக்கப்பட்ட உணவுப்பொட்டலத்தை ஒரு வாய்கூட சாப்பிட முடியவில்லை.அதை சாப்பிட நேரமும் இல்லை.

யாருமே சாப்பிடவில்லை.

வாக்களிக்கும் நேரம் முடிந்து டீ, காபிக்காக அனைவரும் காத்திருக்க…  யாரும் தரவில்லை. கொண்டு போயிருந்த ப்ரெட் – பிஸ்கெட்களை தின்றோம். நிறையப் பேர் சர்க்கரை, தைராய்டு நோயாளிகள் தேர்தல் நடக்கும்போதே படபடப்புக்கு ஆளானார்கள். (அதெல்லாம் யார் கண்டுகொண்டார்கள்!?)

தேர்தல் முடிந்த பிறகும் எதுவும் வழங்கப்படாததால் அவர்களை அழைத்துச் செல்ல வந்த குடும்பத்தினர் உணவுகொண்டு வந்து அவர்களை காப்பாற்றினார்கள்.

அந்தந்த பூத்திலுள்ள பெட்டியை எடுக்க லாரி வரும் நேரம் கணிக்க முடியாதது. அதுவரை பெட்டிக்கருகில் காத்திருக்க வேண்டும். அப்படித்தான் அன்றிரவு பன்னிரெண்டு மணி வரை காத்திருந்தோம். முதல்நாள் இரவு வாக்குச் சீட்டில் சீல் வைக்கும் பணி மற்றும் தேர்தல் அலுவலர் கையெழுத்திடும் பணி. விடிய விடிய. சுற்றிலும் கொசுவும், தவளைக் குட்டிகளும், இன்னபிற பூச்சிகளும்… மின் விசிறி  எங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கும். அப்படியும் வேலை செய்த அலுப்பில் துப்பட்டாவை தரையில் போட்டு படுத்தவுடன் உறக்கம் வந்தது / வந்துவிடும்.

ஒரு வழியாக இரவு பதினொன்றரைக்கு லாரி வந்து பெட்டி எடுத்ததும் பள்ளி வளாகமே காலி. இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களின் உதவி கேட்டு எல்லோரும் சென்றனர். பக்கத்து ஊரில் தேர்தல் பணியில் இருந்த என் தோழி என்னை அழைத்துச் செல்ல காருடன் வரும் வரை இருளில் திக் திக்.

இது ஆறாந்தேதி கதை.  ஒன்பதாம் தேதி மற்றொரு கதை.

பணி வழங்காமல் ரிசர்வில் போட்டு கோர்ட் வளாகத்தில், காவல் நிலையத்தில் கூப்பிடும்போது போவது மாதிரி, கூப்பிட்டவுடன் ஆர்டரைப் பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்ன ஊருக்குப் போகவேண்டும்.
(போனேன்)

என் முப்பது வருட பணிக்காலத்தில் எத்தனையோ தேர்தல் பணிகள்.
ஒரு சிலவற்றைத் தவிர எல்லாமே இப்படித்தான். ஒரு சாகச அனுபவத்திற்கு கிளம்புவது மாதிரி இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும்.

இதில் நானே தேவலாம் என்பது போல ஆதம்பாக்கத்திலிருந்து சித்தாமூர், திருக்கழுக்குன்றம் போன்ற ஊர்களின் கடைக்கோடி கிராமங்களுக்குச் சென்றனர் எனக்குத் தெரிந்த ஆசிரியர்கள்.

தேர்தல் பணியில் கலந்துகொள்ள வரும்போதும், செல்லும்போதும் விபத்துகள், வழிப்பறிகள் போன்றவை நடந்தன.

அடுத்தது மாநகராட்சி தேர்தல் வரப்போகிறது. 

சரஸ்வதி காயத்திரி முகநூல் பக்கத்திலிருந்து…

1 COMMENT

  1. தேர்தல் ” டூட்டி” என்றால் ஒருவித மகிழ்வும் சிற்சில மனஓட்ட படபடப்பு பிரச்சனை “ஒரி”யும் ஏற்படுகிறது. சந் தாே ச மாக
    பணிபுரிய புதுவித ஆ க்கப்பூரவமான திட்டங்களை அரசு உருவாக்கிட வே ண்டும்.
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...

நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது.

1
முகநூல் பக்கம் சபேசன் இராமஸ்வாமி முகநூல் பக்கத்திலிருந்து...   அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார். அப்போது திருச்சியில்  கலியமூர்த்தி ஐ.பி.எஸ். உயர் அதிகாரியாக இருந்தார். அவருக்கு அப்துல் கலாமிடமிருந்து...

கோர்ட்டில் நிறுத்தினாலே நீங்கள் குற்றவாளிதான்.

0
நீயாண்டர் செல்வன் முகநூல் பக்கத்திலிருந்து.... குற்றம் சுமத்தபட்டால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் எனும் லாஜிக் எடுபடாத நாடு ஒன்று உள்ளது. அங்கே அரசு வழக்கறிஞர் உங்களை கைது பண்ணி கோர்ட்டில் நிறுத்தினாலே...

அப்போதே அக்னிபாத் இருந்திருந்தால்…..?!

0
முகநூல் பக்கம்   Nagarajarao Ramakrishnan  முகநூல் பக்கத்திலிருந்து...   நான் இளைஞனாக இருக்கும் போது ஏர்போர்ஸில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரியவேண்டும் என்று ஒரு ஆசை என் அடி மனதில் வேரூன்றி இலை தழையெல்லாம் கூட விட்டு...

அந்த குழந்தைகளில் ஒன்று வளர்ந்தவுடன் பிற்காலத்தில் போலந்து நாட்டின் பிரதமராகியது.

0
முகநூல் பக்கம்   (ப்யாரீப்ரியன்.பெரிய ஸ்வாமி) இணையப் பக்கத்திலிருந்து...      இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் போலந்து நாட்டினை கைப்பற்றச் சென்றபோது, போலந்து நாட்டைச் சேர்ந்த 500 பெண்களையும்,200 குழந்தைகளையும் ஒரு ராணுவக் கப்பலில் ஏற்றி அவர்களை...