0,00 INR

No products in the cart.

தெய்வீகக் காதல்

சிறுகதை                                    ***                                  ஓவியம் : தமிழ்

 – பி.ஆர்.கிரிஜா

1981ம் வருடம். அந்த பல்கலைக்கழக முதுநிலை மாணவிகளின் முதலாம் ஆண்டு வகுப்பில் ஒரே சலசலப்பு. நளினி, நளினி என்று உரக்கக் கூப்பிட்டாள் லதா. நளினி திரும்பிப் பார்க்கவில்லை.  லதாவிற்குப்  பொறுமை போய்விட்டது. “ஹேய், நளினி, எத்தனை முறை கூப்பிட்டேன், நீ திரும்பியே பாக்கல, அப்படி என்னதான் யோசனை? “ என்றாள் லதா.

“ஹேய் லதா, உனக்குத் தெரியுமா? நமக்கு  புதுசா ஒரு யங் புரொபசர் வராராம். நமக்கு ஹைட்ராலஜி க்ளாஸ் அவர்தான் எடுக்கப் போறாராம்” என்றாள் நளினி.

“ஆமாண்டி, நானும் அவரைப் பார்த்தேன்,  நேத்து நம்ம சீனியர்ஸுக்கு க்ளாஸ் எடுக்கும்போது, என்ன ஸ்டைல் தெரியுமா? சும்மா கமல்ஹாசன் மாதிரி பெல்பாட்டம் பேண்ட், ஹிப்பி ஹேர் ஸ்டைல், பெரிய கிருதா, தொங்கு மீசைன்னு அட்டகாசமா இருக்கார்டி” என்றாள் லதா.

என்னம்மா, புது புரொபசரை  சைட் அடிக்கக் கிளம்பிட்டீங்களா? என்றாள் மல்லிகா.

அவர்கள் எல்லோரும் முதுகலை முதலாமாண்டு புவியியல் மாணவிகள். மொத்தம் 22 மாணவிகள். அவர்களது சீனியர்ஸ், அதாவது இரண்டாம் ஆண்டு வகுப்பில் 15 மாணவர்கள், 10 மாணவிகள். ஆனால், இவர்கள் வகுப்பிலோ ஒரு மாணவர் கூட இல்லை. அதில் இவர்கள் எல்லோருக்கும் ஒரே வருத்தம்தான். பல்கலைக்கழகத்தில் ஸ்ட்ரைக் காரணமாக வகுப்புகள் ஆரம்பிப்பதற்கே ஆகஸ்ட் மாதம் ஆனதால், அப்ளை பண்ணியிருந்த சில மாணவர்களும் வேறு கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்து விட்டனர். அதனால், சீனியர் பாய்ஸை கிண்டலடிப்பது என்று தங்களுக்குள்ளே கும்மாளம் அடித்துக் கொள்வார்கள்.

அன்றும் வழக்கம்போல் எல்லா புரொபசர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சீரியஸாக பாடம் நடத்திவிட்டு சென்றனர். எல்லோருக்கும் ஆவல் அதிகமாகிக் கொண்டே போனது. அந்த புது புரொபசர் மணிமாறன் நம் க்ளாஸிற்கு வருவாரா, மாட்டாரா? என்று. ஒரு வழியாக மதியம் இரண்டு மணிக்கு ஹைட்ராலஜி பாடம் நடத்த அவர் வந்தார். அவருக்கு சுமார் 27 வயதிருக்கும். பி.ஹெச்.டி முடித்த கையோடு போஸ்டிங். நாங்கள் எல்லோருமே மாணவிகள் ஆதலால் அவருக்குமே ஒரு சிறிய தயக்கம் இருந்தது.

மெதுவாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “குட் ஆப்டர்னூன் கேர்ள்ஸ், நான் இந்த வருடம் இந்த சப்ஜெக்ட் மட்டும் எடுக்கப் போகிறேன். ப்ராக்டிக்கல்ஸ் ரொம்ப முக்கியம். எல்லோரும் ரெகுலராக வகுப்பிற்கு வரவேண்டும். அடிக்கடி க்ளாஸ் கட் அடிக்கறது எனக்குப் பிடிக்காது” என்று ஆரம்பித்தார்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். மாதம் ஒரு முறை மதியம் வகுப்பைக் கட் அடித்துவிட்டு சினிமா செல்வதுதான் எங்களுக்குக் கை வந்த கலை ஆயிற்றே ? இது என்னடா, புது கூத்து, இவர் இப்பிடி கறாராக இருக்கிறாரே? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் நளினி.

லதாவும், நளினியும் நெருங்கிய தோழிகள். அழகிலும், படிப்பிலும், சுட்டித்தனத்திலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒன்றாய் படித்துக் கொண்டு வருகிறார்கள். லதா இவளைப் பாக்க, நளினி லதாவைப் பார்க்க, இருவருக்கும் அவர்களை அறியாமல் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. நளினிதான் அடக்கமுடியாமல் சத்தமாக சிரித்துவிட்டாள்.

புரொபசருக்கு வந்ததே கோபம். “நான், இவ்வளவு தூரம் சொல்றேன், சீரியஸாக இல்லாமல் என்ன சிரிப்பு ? வாட் இஸ் யுவர் குட் நேம்?” என்று கத்தினார்.

சார், ஐ யாம் நளினி, என்று தயக்கத்துடன் சொன்னாள். நளினி பெயருக்கேற்றாற்போல், நளினமாக அழகாக இருப்பாள். நல்ல கரிய நீண்ட கூந்தல், சிவந்த நிறம், அழகிய பெரிய விழிகள், கூர்மையான நாசி, முத்துப் போன்ற பற்கள் என்று தேவதை போல் இருப்பாள் நளினி.

அவளை நேருக்கு நேர் பார்க்க அவருக்கும் தயக்கமாகத்தான் இருந்தது. அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து கொண்டே, ஓகே, ப்ளீஸ் சிட் டவுன் என்று சொல்லி வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார்.

நாட்கள் செல்ல செல்ல, மாணவிகளும் சீரியசாக அவர் பாடம் எடுப்பதை நோட்ஸ் எடுக்க ஆரம்பித்து, படிப்பில் நல்ல கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அன்றிலிருந்து நளினிக்கும், மணிமாறன் சார் மீது ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்தது.

“ஏய் நளினி, அவரையே பார்க்காம, பாடத்த ஒழுங்கா கவனி, நீ எனக்கு சேலஞ்ச் விட்டிருக்க, முதல் ரேங்க் வாங்குவேன்னு” என்று அப்பப்ப லதா அவளை நிஜ உலகத்திற்கு இழுத்து வருவாள்.

“ஆமாண்டி, என்னதான் அவர் மேல் ஆசை இருந்தாலும், அவர் நமக்கு குரு. நான் இனிமே இப்படி சைட் அடிக்கமாட்டேம்பா”, என்று நளினியும் சொல்வாள். லதாவும் சிரித்துக் கொண்டே அவளைத் தட்டிக் கொடுத்தாள். இரண்டு வருடங்கள் ஓடியே போய் விட்டன. நளினியும் பல்கலைக்கழகத்திலேயே முதல் ரேங்க் வாங்கி கோல்ட் மெடல் வென்றாள்.

*************

திடீரென்று வண்டி ஒரு குலுக்களுடன் தூத்துக்குடி ஸ்டேஷனில் வந்து நின்றது. நளினி திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள். ஓ மை காட் இவ்வளவு நேரம் கல்லூரி நாட்களுக்கு சென்று விட்டேனா ? இப்போது நான் எங்கிருக்கிறேன், என்று ஒரு நொடியில் குழம்பிப் போனாள்.

“பாட்டி, பாட்டி, எழுந்திரு பாட்டி, ஸ்டேஷன் வந்து விட்டது, நாம இறங்கணும்” என்ற போதுதான், நிஜ உலகத்திற்கு அவளால் வர முடிந்தது. தன் ஆறு வயது பேரனின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு மெதுவாக வண்டியிலிருந்து கீழே இறங்கினாள் நளினி. பேரன் வருணும் வள வளவென்று ஏதோ பேசிக் கொண்டே வந்தான்.

நளினிக்கு எதுவும் காதில் விழவில்லை. அவள் மனம் 38 வருடங்களுக்குப் பிறகு மணிமாறன் சாரை நினைக்க ஆரம்பித்தது.

என்ன அருமையான நாட்கள், மறக்க முடியுமா அந்த கல்லூரிப் பருவத்தை , லதாவுடன் வாட்சப்பில் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தாள்.

அப்போது தூரத்தில் ஒரு சேரில் ஒருவர் அமர்ந்துக் கொண்டு  ஃபோனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். நளினிக்கு தூரத்தில் பார்க்கும் போதே மணிமாறன் சார் மாதிரி இருந்தது. சே, எல்லாம் பிரமை, அவரை நினைத்ததால், எல்லோரும் அவர் மாதிரியே தெரிகின்றனர்… எனக்கும் வயதாகி வருகின்றதல்லவா, அதான் பிரமை, என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்

எதேச்சையாக அவர் அருகில் வரும்போது தூக்கி வாரிப் போட்டது நளினிக்கு. அவள் நினைத்தது மாதிரி, அவர் மணிமாறன் சாரேதான். ஒரு நிமிடம் வாயடைத்துப் போய் நின்றாள்.

“சார், சார், மணிமாறன் சார், இங்க பாருங்க, என்ன தெரியல,?” நான்தான் நளினி, 1981 பாட்ச் என்றாள்.

அவருக்கு வயது 66 இருக்கும், நல்ல வழுக்கை விழுந்து, தொப்பை தனியாக தெரிந்தது. ஆனால் அந்த மீசை மட்டும் அவரைக் காட்டிக் கொடுத்தது. நீங்க, நீங்க, நீ நளினி தானே ? என்றார். சொல்லும்போதே அவர் கண்கள் மின்னல் மாதிரி பளிச்சிட்டது.

“ஆமா சார், நளினியே தான். எப்படி இருக்கீங்க ? இது என் பேரன் வருண்”   என்று சொல்லிக்கொண்டே அவர் கையைக் குலுக்கினாள்.

அவர் கை நழுவி உட்கார்ந்த இடத்திலேயே அவர் தலை சாய்ந்தது.

நளினிக்குத் தெரியாது பாவம், மணிமாறன் அன்றிலிருந்து இன்று வரை நளினியையே நினைத்துக் கொண்டு திருமணமே செய்து கொள்ளவில்லை என்று.

“இதுதான் தெய்வீகக் காதலோ!!”

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வெயிட் பண்ணுங்க

இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே. “சிறுக் கீரை, முளைக் கீரை, முருங்கக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, அகத்திக்...

ஒரு சந்திப்பு

0
“நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக. எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..” உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்... உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே...” பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே...

நடத்தையில் ஊனம்!

2
  “நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!” என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம். தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல...

வலி

0
சுந்தர்...கொல்லைப் பக்கம் செடிகளுக்கு பாத்ரூம் தண்ணி சரியா போக மாட்டேங்குது...அதக் கொஞ்சம் வாய்க்கால் வெட்டி பாத்தி  பண்ணி விடேன்... சரி மன்னி... சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பின் பக்கம் போனான். ஒவ்வொரு முறை வரும்போதும்...

பிரம்படி வாத்தியார்

தபால்காரரின் குரல் வாசலில் கேட்டது. பொதுவாக வீட்டுவாசலில் கடுதாசுகளை வீசிவிட்டு செல்கிறவர் நின்று குரல் கொடுக்கிறாரென்றால்….? சமையல்கட்டிலில் இருந்து அம்மாவின் குரல் கேட்டது. “சுந்து. உன்னோட ரிசல்ட் கார்டு கொண்டு வந்திருக்காரு போலிருக்கே... என்னாச்சோ......