0,00 INR

No products in the cart.

பிறந்தால் டென்மார்க்கில் பிறக்க வேண்டும்

’ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்ற வள்ளுவர் வாக்கை வாழ்க்கை நெறியாக கடைபிடிக்கும் ’உலக குடிமகன்  கண்ணன்’ பாராட்டப்பட வேண்டியவர்.

முகநூல பக்கம்  ஆச்சரியமான தகவல்  பிறந்தாலும் ’டென்மார்க்கில் பிறக்க வேண்டும்’ என்று உள்ளம் ஆசைப்படுகிறதே!
– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

ராசார் பதில்கள் காலம் கடந்தும் நிற்கும் உயிரோட்டமானதாகும். “புத்தக விழாவிற்கு  வருபவர்கள் அனைவரும் புத்தகங்கள் வாங்குவதில்லை. வாங்கியவர்கள் சிலர் படிப்பதில்லை. சென்ற புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை என்று பெருமையா சொல்பவர்கள் அதிகம்” என்று தராசார் கூறியுள்ளதைப் படித்து வேதனையடைந்தேன். ‘புத்தகங்களே நம்மை மேம்படுத்தும்; புத்தகமே நல்ல நண்பர்கள்’ என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

“மஞ்சள் நிறத்தில் பூனை” என்ற  சிறுகதை மனதை நெகிழ வைத்தது. எவ்வளவு அருமையான கதை. நாம் சக மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வதே வாழ்க்கையின் உயிர்ப்பு என்று உணர்த்திய அந்த உயிர்ப்பை தனக்கு சொல்லிக்கொடுத்த பூனையின் மீது அதிக ஆசை கொண்டு தன்னையே அந்த பூனையாக  நினைத்து மேலதிகாரிக்கு “மியாவ்” என்று நன்றியை  சொன்ன வித்தியாசமான பெயருடைய நறுமுகைச் செல்வி  கதாநாயகிக்கு பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

 “டெல்லியில் சர்ச்சையை ஏற்படுத்தும் அமர்ஜவான் ஜோதி அணைக்கப்பட்டதா?  இணைக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு அழகான தெளிவான பதில் மூலம் தெளிய வைத்த எஸ்.சந்திரமௌலி அவர்களின் கட்டுரை மனதை நெகிழ வைத்தது. ஒருமுறை தலைநகர் டெல்லிக்கே  சென்று நேரில் பார்த்தது போல ஒவ்வொரு செய்தியும்  உண்மை என்று  உணர வைத்தது. காங்கிரஸ் அணைக்கப்பட்டு விட்டது என்றும், ஆளும் கட்சி இணைக்கப்பட்டு விட்டது என்றும்,  “இரண்டும்  உண்மைதான்” என்று சொல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் அமர்ஜவான் ஜோதியில் ஒரு பகுதி கலந்துவிட்டது என புரிய வைத்த கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.
– உஷாமுத்துராமன், மதுரை

“சீனி மோகன் முகநூல் பக்கத்தை” படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மைதான்.  மிதிவண்டி என்று சொல்லப்படும் சைக்கிளில் இருக்கும் வசதியும் உடல் ஆரோக்கியமும் வேறு எந்த வாகனத்திலும் கிடைக்காது. அதனால்தான் பிஎம்டபிள்யூ கார்களில்  போகிறவனைவிட  சைக்கிளில் போகிறவனுக்கு கூடுதல் மதிப்பு தரப்படுகிது. இதை செய்யும் டென்மார்க் பற்றி படித்த பிறகாவது நாம் மற்ற வாகனங்களை விட்டு சைக்கிளை அதிகம் உபயோகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அதிகம்  ஏற்படுத்திய  அருமையான பக்கம்.
– நந்தினி கிருஷ்ணன்,  மதுரை -6

“வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்” என்ற தலையங்கம் உண்மைதான் என்ற போதிலும், அது வேறு எந்த மாநிலத்தில் வேறு வேறு குடிமக்கள் பணிபுரிந்து வந்தாலும், அவரவர் சொந்த தொகுதி தேர்தல் போது வாக்களிக்க ஏதுவாக திருத்தம் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஷா தீபன் எழுதிய சிறுகதை படித்தேன். ‘சில பிணக்குகள், சில கணக்குகள் வாழ்க்கையில் எப்போதும் நேர்செய்யப்படுவதில்லை’ என்ற வரிகள் வாழ்வின் யதார்த்தத்தை எடுத்துரைத்தது.
– ராமச்சந்திரன், சென்னை

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...

அற்புதமாக கொண்டாடி அசத்தி விட்டார்

0
உங்கள் குரல்   குழம்பிய மனநிலையில் இருந்த எனக்கு மகாசுவாமிகளின் அருளுரையை படித்த பிறகு மனத்தெளிவும், உறுதியும் கிடைக்கப் பெற்றேன். - கலைமதி, நாகர்கோவில் சுஜாதா தேசிகன் வெளிநாடு குறித்து சுஜாதா அன்று கூறியதாக கடைசி பக்கத்தில் பதிவிட்டது...

அந்த நிகழ்ச்சியை அப்படியே நேரில் பார்த்தது போல மனநிறைவு தந்தது. 

0
"சுஜாதா தேசிகன்" அவர்களின் கடைசிப் பக்கத்தில் வந்த "தலைவாழை" படிக்கும் போதே ‘இலையில் சாப்பிட வேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பா  வீட்டில் வாழை மரம் வளர்த்தார். அதில்தான் தினமும் உணவு...

மம்முட்டி வாராவாரம் கலக்குகிறார்.

0
உங்கள் குரல்   யார் வேண்டுமானாலும் இணைய இதழைத் தயாரிக்கலாம். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இணைய இதழை தன் பெயரிலேயே நடத்துகிறார்கள். இந்த இணைய இதழ்களைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவரவர்களுடைய...