0,00 INR

No products in the cart.

படத்தைவிட நம்மை அசர வைப்பது நிஜம்….

முகநூல் பக்கம்

 ராஜன்

 

ஆஸ்கர் இறுதி பட்டியலில் “ரைட்டிங் வித் ஃபயர்” 

1929 முதல், உலக அளவில் , திரைத்துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய கெளரவமாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. கற்பனைப் படங்களுக்கு மட்டும் அல்லாமல், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆவணப் படங்களுக்கும் 1941 முதல் தனியாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2022 ஆம் ஆண்டுக்கான 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

இதற்கு, 138 படங்களில் இருந்து தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்ட 15 படங்களில் இறுதி சுற்றில் இடம் பெரும் 5 படங்களில் ஒன்றாக , நமது இந்திய ஆவணப்படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ (Writing with Fire – documentary film) என்ற படம் இடம் பெறுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு இடம்பிடித்தது இதுவே முதன்முறை என்பது ஒரு மிகப் பெருமையான நிகழ்வு ஆகும்.

ரிண்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் என்ற இயக்குநர்கள் இணைந்து இயக்கிய, ‘ரைட்டிங் வித் ஃபயர்’ என்ற இந்த ஆவணப்படம், பீகாரின் சீதாமர்ஹி பகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்திலும் உள்ள பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த, பெண்களால் நடத்தப்படும் ‘கபர் லெஹ்ரியா’ என்ற சமூகப் பத்திரிகையின் எழுச்சியை வலிமையாக கூறும் படம்.

படத்தை விட நம்மை அசர வைப்பது நிஜம்….

எடிட்டர் கவிதாவின்

2002 வருடம், ஒரு தொண்டு நிறுவனமும் கவிதா என்ற பெண்மணியும் இணைந்து உத்திர பிரதேசத்தில் உள்ள Bundelkhand என்ற பகுதியில் , எளிய முறையில் ஆரம்பித்த ‘கபர் லெஹ்ரியா ‘ (Khabar Lahariya) என்ற சிறு பத்திரிக்கை மிகப் பெரிய சமுதாய தீர்வாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருக்கும் பத்திரிக்கை உலகில் பெண்களும், அதிலும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களும் இணைந்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும், தீர்வுகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பெண்களை மட்டுமே கொண்டு இயங்குகிறது ‘கபர் லெஹ்ரியா ‘ பத்திரிக்கை நிறுவனம்.

கடும் வெயிலில் காலை 5 மணி முதல் பல இடற்பாடுகளையும், நெருப்போடு விளையாடுவது போன்ற பல ஆபத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு உழைத்த பெண்கள் நிருபர் வேலை மட்டும் அன்றி பல அலுவலக வேலைகளையும் சுமந்து நிறுவனத்தை வளர்த்தனர்.

ஏழைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, கிராமங்களில் நீர் தட்டுப்பாடு , (உடைந்த தண்ணீர் பம்புகள் போன்ற சிறு விஷயங்களைக் கூட விடுவதில்லை) , இடிந்த கட்டிடங்கள், சிறு கிராமங்களுக்கு மின்சாரம் போன்ற பல குறைகளை வெளிக் கொணர்ந்து பல தீர்வுகளை அளித்துக் கொண்டு இருக்கிறது இந்த பத்திரிக்கை.

இதன் நிருபர்கள் செய்தியைத் திரட்டுவதோடு மட்டும் நிற்காமல், பொறுப்புடன், நான்கு வாரங்களுக்கு அதை தொடர்ந்து கண்காணித்து தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் வலிமையாக குரல் எழுப்ப வேண்டும் என்பது இந்த பத்திரிக்கை நிறுவனத்தின் கொள்கை.

அதனால், “நாங்கள் ‘கபர் லகரியா ‘ தவிர யாரையும் நம்புவதாக இல்லை.. ” என்று பாதிக்கப் பட்டவர்கள் சொல்லும் அளவு இன்று நம்பிக்கை பெற்று விளங்குகிறது.

இன்றும் மொத்த பத்திரிக்கை நிறுவனமும் திட்டமிடுவதில் இருந்து தேர்வு காணும் பிரிவு வரை அனைத்தும் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது .

’பான்டா’ என்ற கிராமத்தை சேர்ந்த ’மீரா’ என்ற ஏழைப் பெண் 14 வயதில் திருமணம் ஆனாலும் தான் படிப்பைத் தொடர்ந்து, முதன்மை எடிட்டர் கவிதாவின் ஊக்கத்தால் இந்த பத்திரிக்கையில் நிருபராக இணைந்தார். மிக விரைவில் தனது திறமையாலும், உழைப்பாலும், துணிச்சலாலும் பல சவால்களை எதிர்கொண்டு இன்று முதன்மை நிருபராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆவணப்படம் இவரையும் துணிச்சல்மிக்க சுனிதா மற்றும் ஒரு பெண் என்று மூன்று நிறுபர்களையும் சுற்றியே செல்கிறது.

2016இல் இந்த பத்திரிக்கை ஸ்மார்ட் ஃபோன் கூட உபயோகித்திராத , அதிகம் படிக்காத பணியாளர்களைக் கொண்டு, அச்சில் இருந்து டிஜிட்டல் ஆக மாறிய சாதனையையும் இந்த ஆவணப்படம் விளக்குகிறது.

இந்த படத்தின் official trailer : https://www.youtube.com/watch?v=uv51mXOvjJw

இந்த ஆவணப் படம் , இறுதி வெற்றி பெற்று ஆஸ்கார் விருது அடைந்து, நம் நாட்டுக்கும் துணிச்சலான இந்த புதுமைப் பெண்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...