0,00 INR

No products in the cart.

மிகச் சரியான எச்சரிக்கை மணி

 

சுமிதா ரமேஷின் ‘துபாய் எக்ஸ்போ 2020’ நேரடி ரிப்போர்ட், அபாரம்… அட்டகாசம்…அற்புதம்! இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், துபாய்க்கே நேரில் சென்று கண்காட்சியைப் பார்த்து மகிழ்ந்த பரவச அனுபவத்தைத் தந்தது! கூடவே, எந்தவொரு வெற்றிக்கும் தெளிவான திட்டமிடலும் கூடுதலான உழைப்பும் அடிப்படை என்பதை உரைக்காமல், உணர வைத்த உன்னதமான கட்டுரை !

ஷ்யா – உக்ரைன் போரின் தாக்கத்தால் உண்டான விளைவுகளை, ரத்தினச் சுருக்கமாக விளக்கியிருந்த தலையங்கம் அருமை மட்டுமல்ல…மிகச் சரியான எச்சரிக்கை மணியும் கூட! இந்த தருணத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டிருப்பதை குறிப்பாக சுட்டிக்காட்ட தவறாத கல்கியின் கடமை உணர்வுக்கு சபாஷ்! ‘அறிவியலின் ஆகச்சிறந்த நவீன கண்டுபிடிப்புகளால், உயர உயரப் பறந்து கொண்டிருக்கும் மனிதன், ஆறறிவுக்கு அழகான- இலக்கணமான –  ‘போரில்லாத அமைதி உலகத்தை ‘எப்போது படைக்கப் போகிறான் ‘ என்ற ஆதங்கம், நெஞ்சத்தின் அடி ஆழத்தில் இருந்து ஏக்கமாய் பீறிட்டெழுகிறது!

– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

ஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலக நாடுகள் முழுவதும் விலைவாசி உயர்வு மற்றும் பல இன்னல்கள் அடைவது கவலை தரக்கூடிய ஒரு விஷயம் என்பதும் அதை ஐக்கிய நாடுகள்  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது அதைவிட உக்கிரமான விஷயம் என்பதும் உண்மை.

– சி. கார்த்திகேயன், சாத்தூர்

துபாய் எக்ஸ்போவின் தரமான பத்து கட்டிடத்தை காட்டியதுடன் தமிழக முதல்வர் திறந்து வைத்த அரங்கத்தையும் காட்டி இருக்கலாம்.

– மதுரை குழந்தைவேலு

எஸ்.எல். நாணு  எழுதிய ‘மதிற்சுவர்’ சிறுகதை மிகவும் அருமை. அந்த கதையில்  “சுவரில் முருகன் இருந்த கோவிலும் வெறுமையாக இருந்தது” என்ற வரிகளை  படித்ததும் புல்லரித்தது. மிகவும் யதார்த்தமான மிக அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்.

– உஷா முத்துராமன், மதுரை

“ரத்தம், ரணம், ரௌத்ரம்” என்ற RRR படத்தின் சினிமா விமர்சனத்தை  படித்ததும் புல்லரித்தது. ராஜமௌலி அவர்களால் எடுக்கப்பட்ட  பிரம்மாண்ட  திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தபோது கூட அவ்வளவு சிலிர்ப்பு ஏற்படவில்லை. மிக எதார்த்தமாக அருமையாக நேரில் பார்ப்பது போன்ற ஒரு விமர்சனத்தை கொடுத்து  படத்தினுடைய முழு கதையும் எனக்குப் புரியவைத்த “கல்கி” இதழுக்கு பாராட்டுக்கள் நன்றி.

– பிரகதாநவநீதன், மதுரை

டைசிப் பக்கத்தில் அதிக பக்கங்களை படிக்க உதவும் செயலிகளைப் பற்றி எழுதும்போது அண்ணாமலையை சுற்றச்சொல்வது
சுஜாதா தேசிகனின் குறும்பின் உச்சகட்டம்.

– ராகினி, வேலூர்

நீங்கள் கேட்டவை  பதிலில் ஜெயமோகனை சாடியிருப்பது  தராசாரின்  துணிச்சலைக் காட்டுகிறது.

– கண்ணன், நெல்லை

லகப் பொருளாதாரம்  குறித்த  கட்டுரை ஒரு தெளிவான பார்வை

-ராஜேஷ், திண்டுக்கல்

தாய்வீடு திரும்பும் கல்வெட்டுகள் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

– சாந்த குமாரி, திருமங்கலம்

ருவரின் உண்மையான அன்பையும், அறிவையும் பேச்சின் மூலம் அறிய முடியாது. செயல்பாட்டினால் கண்டிப்பாக அறியலாம். நம்மை காத்து கொள்வது எந்நிலையிலும் கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியான வாழ்க்கை வாழ்வதுதான். கிருபானந்த வாரியாரின் அருளுரை கேட்டு வாழ்ந்தால் நலம் பெறலாம்.

– கலைமதி, சென்னை

1 COMMENT

  1. மதிப்புக்குரிய கல்கி ஆசிரியருக்கு
    கலைமதி _சென்னை இல்லை.
    கலைமதி_ நாகர்கோவில்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...