0,00 INR

No products in the cart.

கோர்ட்டில் நிறுத்தினாலே நீங்கள் குற்றவாளிதான்.

நீயாண்டர் செல்வன் முகநூல் பக்கத்திலிருந்து….
குற்றம் சுமத்தபட்டால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் எனும் லாஜிக் எடுபடாத நாடு ஒன்று உள்ளது. அங்கே அரசு வழக்கறிஞர் உங்களை கைது பண்ணி கோர்ட்டில் நிறுத்தினாலே நீங்கள் குற்றவாளிதான்.  கேட்கும் தண்டனை தவறாமல் வழங்கப்படும்.

அது எந்த நாடு?

ஜப்பான்.

அங்கே உங்கள் மேல் வழக்கு தொடரப்பட்டால் தண்டனை கிடைக்கும் சாத்தியக்கூறு 99.98%.

எந்த முன்னேறிய  நாட்டிலும் 99% தண்டனை விகிதம் கிடையாது. ஜப்பானைத் தவிர.

உங்களுக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு 100% கீழ் என தெரிந்தால் உங்கள் மேல் வழக்கே பதிவு செய்ய மாட்டார்கள்.

ஜப்பானிய சிறைகள் நடத்தபடும் முறை தனிக்கதை.
சிறையில்  23 மணிநேரம் யாருடனும் பேசமுடியாது. ஒரே அறையில் இருக்கும் சக கைதியானாலும் சரி. அறைக்குள் படிக்க ஜெயில் நூலகத்தில் இருந்து புத்தகம் கொடுப்பார்கள். எழுத, ஓவியம் வரைய பேப்பர் கொடுக்கப்படும். டிவி பார்ப்பதானால் பார்க்கலாம்.
ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய அனுமதி உண்டு. அப்போது மட்டுமே சக கைதிகளுடன் பேசமுடியும்.
ஜெயில் அறை நல்ல உயர்தர ஓட்டல் தரத்துடன் இருக்கும். நல்ல தரமான, சுவையான உணவு. மீன், அரிசி, மிசோ சூப், சாலட், பழம் வழங்கபடும். ஆனால், அனைத்தையும் 13 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்கவேண்டும்.
உணவு வழங்கும் அறையில் சக கைதிகளுடன் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம். ஆனால், பேசமுடியாது. 13ம் நிமிடத்துக்கு மேல் அமர்ந்து இருந்தால் தட்டு பறிக்கபடும். போக, வர மிலிட்டரி பாணியில் மார்ச்பாஸ்ட் செய்துதான் போகமுடியும். சாதா மார்ச்பாஸ்ட் அல்ல. டாணாகாரண் பாணியில் பக்காவான மார்ச்பாஸ்ட். கைகள், கால்கள் அசைவு எல்லாம் சின்க்ரனைஸ் ஆகவேண்டும்.

ஜெயில் காவலர்கள் கையில் எந்த ஆயுதமும் இருக்காது. ஆனால், அவர்களை தாக்க கூட வேண்டாம். திட்டினாலே போதும். தனிமைச்சிறை. தனியே ஒரு அறையில் பகல் முழுக்க சம்மணம் போட்டு அமர்ந்து நேராக மட்டுமே பார்த்துகொண்டு இருக்க வேண்டும். தலையை தாழ்த்தினால், அசைந்தால் அடி விழும். இங்கே ஒரு வாரம் இருந்தாலே அது நரகத்துக்கு சமமான தண்டனையாக இருக்கும். நாள் முழுக்க சும்மா சம்மணம் போட்டு நேராக தலையை தாழ்த்தாமல் இருப்பதை கற்பனையாவது செய்ய முடிகிறதா?

நாள் முழுக்க அத்தனை கண்டிப்புடன் கையை தூக்குவதை கூட ரெகுலேட் செய்வார்கள். படுத்து தூங்குகையில் பக்கவாட்டு சுவரை பார்த்து தூங்க முடியாது. அப்படி புரண்டு படுத்தால் எழுப்பி திரும்பி சிறை கதவை பார்த்தபடி தூங்க சொல்வார்கள்.

ஒழுங்கா நடந்துகொண்டால் சமையல், தையல், ஓவியம் வரைவது, டிகிரி படிப்பது மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும். இதற்கு பயந்து எல்லாரும் ராணுவ ஒழுங்குடன் இருப்பார்கள். இதனால் ஜப்பான் ஜெயில்களில் வன்முறை, அடிதடி, கலவரம், மாபியா கும்பல்கள், போதை மருந்து கடத்தல் என எதுவும் கிடையாது. ஒருமுறை ஜெயிலுக்கு போனவன் அதன்பின் ஆயுளுக்கும் குற்றம் இழைக்கமாட்டான். ஆனால்,  இதெல்லாம் கடுமையான மனித உரிமை மீறல் என அம்னெஸ்டி உள்ளிட்ட பல அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. ஆனால், ஜப்பான் அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை.

ஒப்பீட்டளவில் அமெரிக்க சிறைகளில் வன்முறை, புதிய கைதிகள் மேல் சக கைதிகளால் நிகழ்த்தபடும் பாலியல் வன்முறை, கொலை, கேங்க் வார், போதை மருந்து எல்லாமே உண்டு. விரும்பியபடி ஜெயிலில் வாழ சுதந்திரமும் உண்டு. ஜப்பானில் ஜெயிலில் இருப்பவர்கள் எண்ணிக்கை மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் அமெரிக்காவைவிட 15 மடங்கு குறைவு. ஜப்பானில் குற்றங்களும் மிக குறைவு
அதுவா? இதுவா? என்றால் ஜப்பானின் தேர்வு இது. அவர்களை அதற்காக குற்றம் சொல்ல முடியுமா?

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...