0,00 INR

No products in the cart.

ஆபத்தான பீஹார் மாடல்

தலையங்கம்

 

ந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் இட ஒதுக்கீடு சாதிவாரியாக வழங்கப்படுகிறது, இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகங்கள் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய காலங்களில், தங்களுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவாகவே கிடைக்கிறது அல்லது எங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இட ஒதுக்கீடு இல்லை எனக்கூறி பல சமூகங்களும் சாதிவாரி கணக்கெடுப்பையும், உள் ஒதுக்கீட்டினையும் கேட்டு வருகின்றன, அதுவே தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள இடங்களில் 31 சதவீத இடங்கள் பொது பட்டியலில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீடு போக, 26.5 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்கிறது. அதுபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. பட்டியலின மக்களுக்கான 19 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு போக 15 சதவீத இட ஒதுக்கீடு பட்டியலின மக்களுக்கு கிடைக்கிறது. தமிழகத்தில் மொத்த இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது

ஆனால், பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் பல சாதியினர் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் அதிக எண்ணிக்கையுள்ள சாதியினர் இட ஒதுக்கீட்டில் தங்களுக்கு உரிய விகிதாசாரத்தில் ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதால் சாதி வாரியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

“அரசாங்கமே இந்த சாதிவாரியான கணக்கெடுப்பினை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்கவேண்டும்” என்ற குரல் இந்திய அளவில் மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலுத்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகளும் இந்த கோரிக்கைக்காக குரல் எழுப்பி வருகின்றன

சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அந்தந்த சமூகங்களின் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ற சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் வாய்ப்பு உருவாகும். இதன் காரணமாக காலம் காலமாக சாதிய அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகங்களுக்கு, அதன் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும், என்பது அவர்களின் வாதம். ஆனால், ஒன்றிய அரசு இந்த கருத்தாக்கத்தை ஏற்கவில்லை. மாறாக மாநில அரசுகள் விரும்பினால் அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இந்த பதிலை பீகார் அரசாங்கம் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. அடுத்த நாளே மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.500 கோடியும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறான முன்னுதாரணமாகி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தொடரும் வாய்ப்பு அதிகம்.

சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்தால் சாதிரீதியான கட்டமைப்பு மேலும் கூர்மைபெறும் வாய்ப்பு உருவாகும், சாதிவாரி கணக்கெடுப்பை கையில் வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான பேரம் பேசும் வாய்ப்புகளும் ஏற்படும், சமூக நீதி = ‘சாதி நீதியாக’ மாறக்கூடும் ஆபத்தும் ஏற்படும்.

இதனால் பீஹார் மாடல் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமற்றது.

 

1 COMMENT

  1. சாதி வாரிய கணக்கெடுப்பின் விபரீதங்களை மிகச்சரியாக சுட்டிக் காட்டியிருந்த நேர்த்திக்கு தலை வணங்குகிறோம்!

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

0
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...