0,00 INR

No products in the cart.

பிட்டுக்கு மண் சுமந்த… பரமன்

கட்டுரை, படங்கள் :
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

 

 

காட்சிகளின் அலங்கார ரூபங்கள்…!

மதுரையம்பதியில் புராண வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில், அங்கு அரங்கேறிய காட்சிகள்தான் பரமன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இப்போதும் ஆண்டுதோறும், சொக்கநாதரே ஒரு கூலியாளாக வேடம் பூண்டு பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வானது உற்சவமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று மதுரை ஸ்ரீ  மீனாட்சியம்மன் ஆலயத்தில் மேற்கண்ட உற்சவம் நடைபெறுகிறது. இங்கு தான் சில வீதிகள் தமிழ் மாதங்களின் பெயரால் அமையப் பெற்றுள்ளன. அது தனி வரலாறு. அதற்கு முன்னதாக பரமன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வினை என்னவென்று சற்று தெரிந்து கொள்வோம்.

சமீபத்தில் (2021 அக்டோபர் – நவம்பர்) பெய்த பெரு மழை போல, முன்னொரு காலத்தில் விடாது அடைமழை பொழிந்துள்ளது. அப்போது பாண்டிய மன்னன் அரசாண்ட காலம். வைகை ஆறு பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எங்கே கரைகள் உடைந்து விடுமோ என்கிற அச்சம் மன்னனுக்கு. அதனால் மதுரை மக்களுக்குக் கட்டளையிடுகிறான். வைகையாற்றுக் கரையினைப் பலப்படுத்தவும் சீர்படுத்தவும் வேலைகள், மதுரை மாநகர மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அந்த வகையில் வந்தி எனும் மூதாட்டிக்கு அவளது பங்காக, கொஞ்சம் மண்ணை வெட்டிப் போட்டு வைகைக் கரையினைப் பலப்படுத்த வேண்டும் என்பது பாண்டிய மன்னனின் அரச கட்டளை. அது சரி. இந்த வந்தி யார்?

வைகை ஆற்றங்கரையோரமாக பிட்டு அவித்து விற்று, அதன் வருவாய் மூலமாகத் தன் வயிற்றைக் கழுவி வருபவள் தான் வந்தி எனும் பெயர் கொண்ட வயோதிக மூதாட்டி. வயது மூப்பு, உடல் தள்ளாமை காரணங்களால் மன்னனின் கட்டளைக்குக் கீழ் பணிந்து களப்பணியாற்ற முடியவில்லை. மிகவும் கவலையுற்று, இறைவனிடம் வேண்டுகிறாள் வந்தி. அப்போது பிட்டு விற்கும் இடம் வழியாக, தோளில் மண்வெட்டி சுமந்து கூலியாள் ஒருவன் நடந்து வருகிறான். இவனே சரியான ஆள் என்கிற திருப்தியுடன், குந்தி அவனை அருகே அழைக்கிறாள். தனது இயலாமையை அவனிடம் எடுத்து உரைக்கிறாள். “இம்புட்டு தானே? அதுக்கோசரம் தான் நா மம்புட்டியோட வந்துருக்கேனாக்கும். உம் பங்கு மண்ணை நா வெட்டிப் போட்டுடுறேன்.” என்கிறான்.

“நீ மவராசனா இருப்பேப்பா” இது கிழவி.

“நா மவராசனா இருக்குறது அப்புறமா பாத்துக்குவோம். நா உம்மோட பங்கு மண்ணை வெட்டிப் போட்டா…  எனக்கு என்ன கூலி தருவே. அதை மொதல்ல சொல்லு” என்கிறான். “உனக்குக் கூலியா தர என்ட்ட பணங்காசு ஏதுமில்லே. நா அவிச்சு வெச்சிருக்குறதுல நாலு புட்டு தர்றேன்.”

“அதுவும் சரி தான். இப்ப எனக்கு ரொம்பப் பசிக்குது. மொதல்ல பிட்டு கொடு.” “பசியோட நீயுந்தான் எப்பிடி மண்ணு வெட்டுவே? நாலு புட்டு தர்றேன். திண்ணுட்டுப் போயி வெட்டிப் போடு மண்ணை.”

“அதுக்கு தானே நானு மம்புட்டி கூடையோட வந்துருக்கேன். சரீங்க தாயீ. என்னோடப் பசியாறக் குடுங்க.” வயிறாரச் சாப்பிடுகிறான். சாப்பிட்டு முடித்து விட்டு வைகை ஆற்றங்கரை நோக்கிக் கிளம்புகிறான். அந்தக் கூலியாளின் தோளிலே மண்வெட்டி. தலையிலே ஒரு கூடை.

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? கூடையைத் தலைக்கு வாகாக வைத்துக் கொண்டு தரையிலே படுத்துத் தூங்கி விடுகிறான் அந்தக் கூலியாள். வைகைக் கரையினைப் பலப்படுத்தும் பணிகளை மேர்பார்வையிட பவனி வருகிறார் பாண்டிய மன்னன். பிட்டு விற்கும் வந்தியிடம் கேட்கிறார். “என்னோட வயசுக்கும் உடம்புக்கும் என்னால மண்ணை வெட்டிப் போட்டு தூக்கியாந்து கரையைப் பலப்படுத்த முடியாது மன்னா. அதனாலே…” வந்தி தாழ்ந்த குரலில் பேசுகிறாள். “அதனாலே…??” என்று கர்ஜிக்கிறான் மன்னன். நடந்ததைக் கூறுகிறாள் வந்தி. கரைக்கு விரைகிறான் பாண்டிய மன்னன். அங்கே தலைக்குக் கூடையும் பக்கத்திலே மண்வெட்டியுடன் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான் அந்த வேலையாள்.

மன்னனின் கோபம் தலைக்கேறுகிறது. இடுப்பில் இருக்கும் சாட்டையை உருவுகிறான். சாட்டையை வீசுகிறான்…  வீசுகிறான்…  என்ன ஆச்சர்யம்? வீசிய சாட்டையின் ஒரு அடி கூட அந்தக் கூலியாள் மீதாக விழவே இல்லை. மாறாக வீசிய சாட்டையின் ஒவ்வொரு அடியும் மன்னன் மீதாகவும் மதுரையம்பதியில் வாழ்வோர் ஒவ்வொருவர் மீதாகவும் அந்தச் சாட்டையடி விழுந்து கொண்டே இருந்தது. அப்போது தான் மன்னனுக்குப் புலப்பட்டது. வந்ததும், கூலிக்கு பிட்டு வாங்கி சாப்பிட்டதும், சாப்பிட்டு இப்போது படுத்து உறங்கிக் கொண்டிருப்பதும் சாதாரணக் கூலியாள் இல்லை என்று. பாண்டிய மன்னனின் கண்ணெதிரே ரிஷப வாகனத்தில் பரமனாகிய பரமேஸ்வரனும் பார்வதியும் தோன்றுகின்றனர். மெய்சிலிர்த்துப் போகிறான் பாண்டிய மன்னன்.

“மன்னா… தன் உடலாலும் மனதாலும் நற்காரியங்கள் செய்ய இயலாதவர்கள் உள்ளம் உருகி வேண்டுகையில், அவர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவுவதே இந்தப் பரமனின் திருவிளையாடல். அதனை மெய்ப்பிக்க வேண்டியே யாம் இங்கு எழுந்தருளினோம்.” என்று அசரீரியாகக் குரல் கேட்கிறது. பரமனே நேரில் வந்து பிட்டுக்கு மண் சுமந்த புராண வரலாறு இது தான்.

மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில், இந்த உற்சவம் நடக்கிறது. ஆனால், மேற்சொல்லி வந்தது போலத் தொடர் காட்சிப்படிம அலங்கார ரூபங்களாக நடத்தப்படுவதில்லை. திருச்சியில் வசிக்கும் “அலங்காரம்” கணேஷ் குருக்கள் என்பவருக்கு, அந்தப் புராண நிகழ்வினையே அடுத்தடுத்தக் காட்சிகளில் கண் முன்னே அலங்கார ரூபங்களாகக் கட்டமைத்து நிறுவினால் என்னவென்று அவரது மனதிலே தோன்றியது. உடனே செயல்படவும் தொடங்கி விட்டார்.

“திருச்சி பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் கோயில். அங்கு பைரவர் சந்நிதியில் இந்த அலங்காரம் மேற்கொண்டு, பக்தர்களுக்கு அங்கேயே காட்சியருளுதலாக வைக்கப்பட்டிருந்தது.

எனது நான்கைந்து உதவியாளர்கள் துணை கொண்டு இரண்டு நாளில் அலங்கார ரூபங்களை உருவாக்கினோம். பரமன் பிட்டுக்கு மண் சுமந்த புராண கால வரலாற்றினை நான்கைந்து காட்சிகளாகப் பிரித்து அதனை வகைமைப்படுத்திக் கொண்டோம். பைரவர் சந்நிதியில் பக்தர்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைத்திருந்தோம்” என்கிறார் திருச்சியில் வசித்து வரும் “அலங்காரம்” கணேஷ் குருக்கள்.

 

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

இந்தச் சிறுமி எதிர்காலத்தில்  இந்தியாவிற்காக செஸ் ஆடுவார்

0
வினோத்   அசத்தலான ஆரம்ப விழா, சிறப்பான ஏற்பாடுகளுக்காக அனைத்து நாட்டு வீர்களின் பாராட்டுகளைத்தாண்டி  இந்த ஒலிம்பியாட்டில் கவர்ந்த விஷயங்களில் ஒன்று சிறுவர் சிறுமியர் பெருமளவில் பங்கேற்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த எந்த...

சுதந்திர தினம் : இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15; பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14. என்ன காரணம்

1
  சுதந்திர தின ஸ்பெஷல்   – எஸ். சந்திரமௌலி இந்திய சுதந்திர சட்டத்தின்படி,  பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான்...

வாசகர்களைக் கதைக்குள் அழைத்துச் செல்லும் ஒரு குரல் .

2
கா.சு.வேலாயுதன்   ‘‘நான் ஒரு குரல் கலைஞர்!’’ - ஆடியோ புத்தகங்களில் கலக்கும் மீனா கணேசன் சென்னை புழலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் ரெட்ஹில்ஸ். இங்கே ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது அந்த வீடு. சின்னதாக ஒரு ஹால்,...

அண்டார்டிக்காவிலிருந்து 5000 கி.மீ., பறந்து வந்த பறவை

0
  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் கடற்கரை பகுதிகளில் மாதந்தோறும் பறவைகள் கணக்கெடுக்க  ஆராய்ச்சி மாணவர்கள் செல்வது வழக்கம். அண்மையில் தங்கச்சி மடம் அந்தோணியார்புரம் மீன்பிடி இறங்குதளம் அருகே வனத்துறையைச் சேர்ந்தவர் மீனவருடன்...