0,00 INR

No products in the cart.

இதில் எழும் இசை எப்படியிருக்கும்?

 

இந்த வாரம் இவர்

 

ந்தூர் என்பது ஜம்மு-காஷ்மீருக்குச் சொந்தமான ஒரு பழங்கால தந்தி வாத்திய  இசைக்கருவி. இது பெர்சியாவில் தோன்றியது. இந்த வகை கருவி மெசொப்பொத்தேமியாவில் (கிமு 1600-911) கண்டுபிடிக்கப்பட்டது என்கிறது வரலாறு.  சந்தூர் செவ்வகமானது பொதுவாக 100 தந்திகளைக் கொண்டது , நமது வேதங்களில் இது  ‘சதா தந்திர வீணா’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  சந்தூர் இந்தியச் செம்மொழி இசையில் பயன்படுத்தப்படவில்லை. உண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே யாரும் இந்த கருவியைப் பார்த்ததில்லை அல்லது சந்தூர் என்ற பெயரைக் கேட்டது கூடஇல்லை.

1950 களில்  சிவ்குமார் சர்மாவின் தந்தை  இந்த கருவியைக் காஷ்மீரில் பார்த்தார், சந்தூரில் இந்திய கிளாசிக்கல் இசையை அறிமுகப்படுத்த நினைத்தார். அவர் சந்தூரைப் பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சி செய்து தனது மகனான சிவ்குமார் சர்மாவுக்கு சந்தூரின் சிக்கல்களைக் கற்பிக்கத் தொடங்கினார்.

சிவ்குமார் சர்மா தனது 5 (ஐந்து) வயதிலேயே  நல்ல  பாடகராக அறியப்பட்ட வரம்பெற்ற குழந்தை.  அவர் மிகச் சிறிய வயதிலேயே  இதற்கு முன்னர் இந்திய கிளாசிக்கல் இசையில் பயன்படுத்தப்படாத சந்தூரை அவரது முக்கியக் கருவியாக சிவ்குமார் எடுத்துக்கொண்டார்.

காஷ்மீரில் சந்தூர் இசைக்கப்படும்போது  இசைக்கலைஞருக்கு முன்னால் ஒரு மர ஸ்டாண்டில் வைக்கப்படும். சிவ்குமார் சர்மா அந்தப் பாணியை மாற்றி   மடியில் வைத்து வாசிக்கத் தொடங்கினார்.  ‘அர்த்தபத்மாசானம் என்ற முறையில் (இது ஒரு யோகாசனம்) உட்கார்ந்து மடியில் குழந்தையைப் போல் வைத்து வாசிக்கவேண்டும்.  இந்த முறையில்தான் தன் வாழ்வின் கடைசி நாள் வரை வாசித்தவர் சிவ் குமார் சர்மா.

இந்த கருவியை உலக இசையோடு இணைத்த பெருமை இவருக்கு உண்டு. மிகப்பிரபலமான ஐரோப்பிய, அமெரிக்க இசைக்குழுக்களுடன் இந்தக் கருவியை இசைத்தவர்.  இந்த கருவியை திரை இசைக்குப் பயன்படுத்தி வெற்றிக்கண்டார்.  இவரிடம் இதைப் பயின்ற மாணவர்கள் இந்தியத் திரைப்பட உலகின் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பணி செய்திருக்கின்றனர். தமிழில் மெல்லிசை மன்னர் பல பாடல்களில் இந்த இசைக்கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்.  இதன் இசை எப்படியிருக்கும் எனத்தெரிய வேண்டுமா? ‘மின்னலே’ படத்தில் வரும் ‘வெண்மதி, வெண்மதியே நில்லு’ என்ற பாடலைக் கேளுங்கள். மற்ற இசைக் கருவிகளிலிருந்து சந்தூர் தனித்து ஒலிப்பதைக் கேட்கலாம்.

ஒரு பழமையான இந்திய இசைக்கருவியை இந்திய இசைக்கு மட்டுமில்லாமல், உலக இசைக்கு அறிமுகப்படுத்திய சிவ்குமார் சர்மா அண்மையில் காலமானார்.

ஓவியர் ஶ்ரீதர்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...