0,00 INR

No products in the cart.

இந்நாவல் ஓர் ஆவணம் என்றே சொல்லலாம்.

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

–  நூல் அறிமுகம்

 

லகில் பல்லாயிரக்கணக்கான மதங்கள் இருந்தாலும் மிகத் தொன்மை வாய்ந்த மதங்களில் ஒன்றாக (Zoroastrianism) சொராஷ்ட்ரியம் மதமும் கருதப்படுகிறது. கி.மு 50000 – 20000 இடையில் இம்மதத்தின் வரலாற்று சாட்சியங்ளும் குறிப்புகளும் கிடைப்பதாக கூறுவதில் நம்பகத்தன்மையின் உறுதி குறைந்தாலும் கி.மு 522-486 ஆகிய காலக்கட்டத்தில் ஈரானிய அரசர்கள் பின்பற்றிய மதமாக சொராஷ்ட்ரியம் இருந்ததற்கான வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன.

படையெடுப்புகள் ஒரு மதத்தின் அடிவேரைக் கூட விட்டு வைக்காமல் அறுப்பதும், அது முடியாதபோது அதன் தொண்மை பண்புகளில் கலப்பு செய்வதும் இயல்பாகவே நிகழ்ந்துள்ள நிகழும் வரலாற்று சாத்தியம்.

கி.மு. 633 முதல் 654 வரை தொடர்ச்சியாக நிகழ்த்த இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்புவரை சொராஷ்ட்ரியமே பாரசீக பேரரசுகளின் அதிகாரப்பூர்வ மதநெறியாக இருந்தது

கிறித்துவ ரோம பேரரசு பாரசீக அரசுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவுக்குப் பின் கி.பி. முதலாம் நூற்றாண்டு முடிவில், அங்கு கிறித்துவம் மெல்ல மெல்ல பரவி சொராஷ்டிரியத்தை முற்றாக வீழ்ச்சியடையச் செய்தது. எனினும் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை இம்மதம் இரண்டாவது பெரும் மதமாகவே நீடித்து வந்தது.

கி.பி. 7ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் வலிமைமிக்க படையெடுப்பால் பாரசீகம் வீழ்ச்சியடைந்தபோது சொராஷ்ட்ரிய அரசுடன் சேர்ந்து அவர்களது மதமும் வீழ்ந்தது. உமையா கலீபாவின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு சிறப்புச் சலுகை பறிக்கப்பட்டது. படிப்படியாக நிகழ்ந்தேறிய இஸ்லாமிய மயமாக்கத்தின் பாதிப்புக் காரணமாக கடும் சூழல் நிலவியது. இருப்பினும் தங்கள் மத நெறியை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அதனுடன் தங்கள் பிழைப்பு நிலைத்திருக்க உலகின் சில பகுதிகளில் இம் மக்கள் தஞ்சம் புகுந்தனர். அதிலும் குறிப்பாக அவர்கள் விரும்பி குடியேறிய நாடு பாரதம். குறிப்பாக இதன் இருபெரும் சமூகத்தில் ஒன்றாக கருதப்படும் பார்சி இனத்தினர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தங்கள் பாதங்களை நம் நாட்டில் வலுவாக ஊன்றிக் கொண்டனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைந்து போயிருந்தாலும் தேசத்தின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர்.(இது குறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்)

பார்சி மக்கள் தீவிரமான மதக்கட்டுபாடுகள் மற்றும் இனம் கலவாத திருமண முறைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் கொண்டவர்கள். குறிப்பாக அக்னியை தங்கள் கடவுளாக வணங்கும் இச்சமூக மக்கள் பஞ்சபூதங்களின் தூய தன்மையை போற்றுகின்றனர். தங்கள்
மதநெறிகள்படி மரணமடைந்தவர்களின் உடல்களை மலைகள் மற்றும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயரமான கோபுரங்கள் மீது வைத்து கழுகுகளுக்கு உணவாக்கி விடுகின்றனர். இந்த மாறுபட்ட பழக்கமுறைக்கு நவீன விஞ்ஞானம் தடையாக உள்ளதாக கருதுவதற்கு பின்னால் மறைந்திருக்கும் சூழலியல் அபாய எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகளில் அதிகமாக கலக்கப்படும் டைக்ளோஃபினாக் இரசாயணத்தால் பிணந்தின்னிக் கழுகுகள் பெரிய அளவில் குறைந்து அரிதாகி விட்டது. (இப்பொழுது பிணந்தின்னி கழுகுகள் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை…) குறிப்பாக இந்தியாவில் குஜாராத், மும்பை பகுதிகளில் அதிகம் வசிக்கும் பார்சி இன மக்கள் பின்பற்றும் இந்த இறுதி சடங்கு முறை கேள்விக்கும் விவாதத்துக்கும் உரியதாக தொடர்ந்து வருகிறது.

பார்சி இன மக்களின் பூர்வீக வரலாற்று ஆய்வும், மாறுபட்ட இறுதிச்சடங்கு கலாசாரம் முறைகள் குறித்தும் இங்கு இப்போது ஏன் பேசுகிறோம் …? ஏனென்றால் பெரும்பாண்மையாக இருந்த ஒரு மதம் சிறுபாண்மையான போதும் பொருளாதாரத்தில் பின்னடையாமல் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அதேசமயம் தன்னுள் கிளைவிட்ட தமது இனத்தின் உட்பிரிவு சிறுபாண்மை மக்கள் மீது எவ்விதமான பார்வையை வீசுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் கவனிப்பதற்கும் வரலாறு அவசியமாகிறது.

மரணம் என்பதை பொதுவாக வாழ்விலிருந்து தனித்து வைக்கப்பட்ட சிந்தனையாகவே பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். மரணமடைந்தவர்களை கையாளும் மனிதர்களை தாழ்வானவர்களாக கருதும் பெரும்பாலான பொதுசமூகத்தின் கருத்தோட்டத்தின்படி இந்த பழமையான மதமும் இயங்குகிறதா…? இந்நாவல் இச்சமூகத்தின் இருள் நிறைந்த பிணந்தூக்கிகளின் வாழ்வை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது.

உயர்குல பார்சி ஒருவன் கதகதப்பு தரும் நெருப்பு கடவுளின் சேவையைவிட கழுகுகளுக்கு இரையாகும் பிணங்களை தூக்கும் சேவையை தனது காதலுக்காக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறான். தொழில் ரீதியான பாகுபாட்டின் துவேஷத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்கொள்கிறான்.

குலமுறையில் பின்தங்கியவர்கள் என சமூக நிராகரிப்புக்கு உள்ளானவர்கள் மீது புனையப்படும் இலக்கியங்களில் அவர்களை கண்ணியக் குறைவாக சித்தரிக்கும் பிற்போக்குத்தனமான சிந்தனை மரபுக்கு மாறாக பிணந்தூக்கியின் நாயக பிம்பம் மாறுபட்டதாக உள்ளது. இந்நாவலின் நாயகன் சிந்திப்பவன் மட்டுமல்ல, வாழ்வின் மீது தேடலும் விசாரமும் கொண்டவன்.

“நம் வாழ்க்கையில் படும் துன்பம் ஒவ்வொன்றும் நம் குணங்களில் உள்ள குறைகளை வெற்றி கொள்வதற்காக மிகத்துல்லியமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு” என்றே அவன் கருதுகிறான். புடம்போட்டுக் கொள்ள உதவும் இம்மாதிரி சிந்தனைகளால் அவன் நாசி சாவின் துர்நாற்றத்தை சுவாசித்தாலும் வெளியேற்றும் தருணத்தில் அது நறுமண காற்றாகவே நம்முடன் சங்கமித்து விடுகிறது.

அறிமுகம் இல்லாத புதிய மதம், மக்கள், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் என முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இந்நாவல் ஒரு ஆவணம் என்றே சொல்லலாம். பிசிறில்லாத புரிதலுக்கு மொழிப்பெயர்ப்பாளர் மாலன் அவர்களின் தனித்துவமான மொழியாக்க நடை சீர்மை தருவதுடன் வாசிப்பின் வேகத்தையும் கூட்டுகிறது.

மஞ்சுநாத்
Chronicle of a Corps Bearer
சைரஸ் மிஸ்திரி (Cyrus Mistry’s)
தமிழில்: மாலன்
வெளியீடு: சாகித்திய அகாதெமி

••••••••••••••••••••••••••••••••••••••••

அறிமுகம் குறித்து தமிழாக்கம் ஆசிரியரின்   பார்வை

எனக்கு ஒரு புத்தகம் என்பது என்னுள் ஒரு ஜன்னலைத் திறப்பதாக இருக்க வேண்டும். வெறும் வாசிப்பு சுகத்திற்காக வாசிப்பது என்பது நாற்பது + வயதில் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்தது. அதற்கு முந்தைய காலம் துண்டு பிரசுரத்திலிருந்து தலையணகள் வரை வெறிகொண்டு வாசித்த காலம்.

அதுவும் பிறமொழிப் படைப்புக்கள் நான் அறியாத உலகை அறிமுகப்படுத்தும் சாவியாக இருக்க வேண்டும். அது என்னைத் தொட்டால் அதைத் தமிழுக்குத் தர முயற்சித்ததும் உண்டு. அமெரிக்கக் கறுப்பினப் பெண்களின் வாழ்வை விவரிக்கும் குளோரியா நைலரின் The women of Brewster Place ஐயும், புரட்சியை நோக்கிய நெடும் பயணத்தூடே இயற்கையில் மனதை இழக்கும் மாவோவின் கவிதைகளையும் அதனால்தான் மொழிபெயர்த்தேன்.

அதே காரணத்திற்காகத்தான் சைரஸ் மிஸ்திரியின் Chronicle of a Corpse Bearer ஐயும் மொழிபெயர்த்தேன். எனக்கு பார்சிகள் மீது வியப்பும் இரக்கமும் உண்டு. அறிவாளிகள், பணக்காரர்கள் ஆனால் எல்லாம் இழந்தவர்கள். அவர்களில் இழந்தவர்களின் கதையைச் சொல்லும் நாவல் அது. காதல் என்பதன் வலிமையையும் கூட.

அது குறித்த விரிவான ஒரு விமர்சனத்தைவாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்” குழுவில் Manjunath Khirsagar பதிவிட்டிருந்தார். “நான் மொழி பெயர்த்த நூலின் பதிவு என்பதைக் காட்டிலும் நான் ஏன் அதை மொழிபெயர்த்திருக்கிறேன்” என்று அவர் சரியாக ஊகித்து எழுதியிருந்தது மகிழ்வளித்தது.

அறிமுகம் இல்லாத புதிய மதம், மக்கள், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் என முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இந்நாவல் ஒரு ஆவணம் என்றே சொல்லலாம்” என்று அவர் சரியாக மதிப்பிட்டிருக்கிறார்.

அவருக்கு என் நன்றி.

மாலன்

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...