0,00 INR

No products in the cart.

பிரபஞ்சத்தில் நடந்த முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டி

நூல் அறிமுகம்

கருணா மூர்த்தி

 

யானைக்கும் அடி சறுக்கும் என்பது தமிழில்  வழங்கப்படுகின்ற ஒரு மரபுத் தொடர் வாக்கியம்.

இந்தத் தொடரை ஏன், எப்பொழுது, எதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் .

இதற்கு சரியான ஆங்கில பதம்,

EVEN HOMER  NODS… என்று தெரியவந்தது.

இலக்கிய ஜாம்பவான்கள், மகாகவிகள் படைப்பாளிகள் அனைவருமே பூனைகளுக்கு மத்தியில் கம்பீரமாக நிற்கும் யானைகளாகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஹோமரும் அப்படிப்பட்ட ஒரு மகா ஆளுமை உள்ளவர்தான்.

ஹோமர் எழுதிய மகா காவியங்கள்தான் இலியட், ஒடிச .

இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்(Pre-historic Period). இதி-ஹ-ஆஸ என்பதற்கு இப்படி உண்மையில் இருந்தது என்று அர்த்தமாகும்.  இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.

நில உடமைச் சமுதாயம் ஒரு காலகட்டம் வரை இருந்து அடுத்த கட்டத்திற்கு மாறி செல்லும்போது அதன் பரிணாமங்கள், நிகழ்வுகள், மாறுதல்கள், அனைத்தும் வாய்மொழியாக ஒரு காலகட்டம் வரையிலும் குருவின் மூலமாக சீடர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டு, செவி வழிச் செய்தியாக மேற்கோள்கள் காட்டிடவும், நீதி சொல்லவும், சமுதாய சட்டங்களாகவும் காலத்தை கடந்தும்,  உயர்ந்து நிற்கிற வரலாற்றுப் பெட்டகமே இதிகாசமாகும்.

அந்த வகையில் பார்க்கும் பொழுது ஹோமர் எழுதிய இந்த எளிய காவியம் சிறப்புக்கு உரியதாக கருதப்படுகிறது. அது குறித்துப் பார்ப்போம்.

ஹோமரின் நாக்கில் நினைவாற்றலின் தேவதையாக கருதப்பட்ட மியூசஸ் குடியிருந்தாள்.

ஹோமர் மூலமாக அவளே காப்பியம் பாடுகிறாள்.

காப்பியத்தின் கதை (Bronze Age) கி.மு. 12 அல்லது 13ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.

இலியட் காவியம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்ட நீண்ட கவிதையாகும்.

தற்கால வடமேற்கு துருக்கியில் அமைந்த ஒரு நகரம்தான் ஹோமர் கால ட்ராய் (இலியம்).

‘இலியம்’ என்ற நகரை கிரேக்கர்கள் முற்றுகையிட்டபோது நடந்த நிகழ்வுகளை சொல்வதால் இந்த காவியம் இலியட் என்று பெயர் பெற்றது.

கதைக்கு முந்தைய கதை:

கிரேக்கர்களின் ‘ஜியூஸ்’ என்ற தலைமை கடவுளும் அவன் தம்பி ‘பொசைடன்’ என்ற  கடல் கடவுளும், ‘தீட்டிஸ்’ என்ற ஒரு கடல் தேவதையின் மீது மோகம் கொள்கின்றனர்.

ஆனால், அவளுக்குப் பிறக்கும் மகன், அவனுடைய அப்பாவைவிட பெரிய ஆள் ஆவான் என்று தேவன் முன்னறிவிப்பு செய்கிறார். எதற்கு வம்பு என்று அண்ணனும் தம்பியும் மணஉறவு கொள்ளும் எண்ணத்தை கைவிடுகின்றனர்.

ஆனால் அவளை ‘பீலியூஸ்’ என்ற ராஜாவுக்கு திருமணம் செய்வித்தனர். அதில் ஒரு சுயநலம் இருந்தது.

பீலியூஸ் ஒரு மனிதன்;  இறந்துவிடக் கூடியவர். எனவே, அவளுக்கும்  அவனுக்கும் பிறக்கும் குழந்தையும் இறந்துவிடக் கூடிய ஒரு மனிதனாகவே இருக்கும். தங்களுடைய கடவுள் அந்தஸ்துக்கு ஒரு மனித குழந்தையின் மூலம் எந்த குந்தகமும் வந்துவிடக் கூடாது என்று அவர்கள் கருதினர்.

அவர்களுக்கு  பிறந்தவன் தான் அக்கிலிஸ். ஆனால் அவனை  எப்படியாவது இறப்பில் இருந்து காப்பாற்றிவிடவேண்டும் என்று கடல் தேவதையான  தாய் தீட்டிஸ் ஒரு உபாயம் செய்தார்.

பாதாள உலகத்தில், ஸ்டிக்ஸ் என்ற புனிதமான விஷம் உள்ள ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

ஸ்டிக்ஸ் தண்ணீருக்கு ஒரு சிறப்பு உண்டு. உடலில் எந்த இடத்தில் அந்த தண்ணீர் படுகிறதோ அந்த பகுதி சாகாவரம் பெற்றுவிடும். எனவே குழந்தையின் குதிகால்களைப் பிடித்துக்கொண்டு அவன் தாய் ஸ்டிக்ஸ் ஆற்றில் குழந்தையை தலைகீழாக அமுக்கி முக்கி எடுக்கிறாள்.

குதிகாலில் தண்ணீர் படவில்லை. எனவே, அந்த இடம் அக்கிலிஸ்ன் பலவீனமான இடமாகும்.

மனிதனின் பலவீனத்தை குறிக்க  ஆங்கிலத்தில் Achilies’s Heel இன்று ஒரு மரபுத் தொடர் உள்ளது.

மகாபாரதத்தில் துரியோதனனைக் காப்பாற்ற அவன் தாய் அவனை பிறந்த மேனியாக அழைக்க, அவன் இடுப்பில் துண்டுடன் வரவே , அந்த இடம் மட்டும் அவனது பலவீனமான இடமாக அமைந்தது போலத்தான் இங்கே அக்கிலிஸ்ன் பலவீனமான இடம் அவனது குதிகால்.

பீலியூஸ் – தீட்டிஸ் திருமணத்திற்கு எல்லா கடவுளர்களும் அழைக்கப்பட்டார்கள். ‘எரிஸ்’ என்ற தேவதையை தவிர.

அழைக்கப்படாமல் வந்த எரிஸ் ஒரு மேஜையின் மீது ஒரு தங்க ஆப்பிளை வைத்தாள். அதில் “உலகின் தலைசிறந்த அழகிக்கு இது” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

உடனே அங்கு வந்திருந்த மூவருக்கும் “யார் அழகு” என்ற போட்டி வந்துவிட்டது. பிரபஞ்சத்தில் நடந்த முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நகர இளவரசனான பாரிஸ் என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

“மஞ்ச லஞ்சம்” வழங்கிய ஹெலன் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட , ஆப்பிள் அவளுக்கு சென்றது .

சண்டைக்கான காரணம் என்பதற்கு ஆங்கிலத்தில்  Apple of Discard  என்று சொல்வார்கள். அந்த ஆப்பிள் இந்த கதையில் இருந்து வருவதுதான்.

அந்த உலகப் பேரழகி ஹெலன். இலியட் காவியத்தின் கதாநாயகி.

அவளை கடத்தி சென்றதற்காகத்தான் யுத்தமே நடந்தது. பத்தாண்டுகள் அந்த யுத்தம் நடந்தது. “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”
என்ற பழமொழியும் இதனால் வந்ததுதான் போலும்.

இலியட் கதைச் சுருக்கம் சுருக்கமாக பார்ப்போம்:

கிரேக்க தலைமை கடவுளான ஜீயூஸ்க்கும் லீடா  என்ற பெண்ணுக்கும் பிறந்தவர் தான் ஹெலன்.

ட்டின்டாரியூஸ் என்பவனுடைய மனைவி என்று சொல்லப்படுகிறது . ஜீயுஸ் வண்ணப் பறவை வடிவத்தில் லீடாவுடன் கூடியதாகவும் அதன் விளைவாக முட்டையிலிருந்து ஹெலன் குஞ்சு வந்ததாகவும் கிரேக்க புராணம் கூறுகிறது.

ஹெலன் கொள்ளை அழகு.

ஸ்பார்ட்டாவின் ராஜா மெனிலயஸ் என்பவனின் மனைவி அவள்.

டிராய்  நாட்டு இளவரசன் பாரிஸ் ஹெலனைப் பார்க்கிறான். அவள் மீது ஆசைப்பட்டு அவளை கடத்திக் கொண்டு போய் இலியம் என்ற ஊரில் சிறை வைக்கிறான்.

இந்த விஷயத்தை தனது அண்ணன் அகமெம்னனிடம் சொல்கிறான் மெனிலயஸ்.

கிரேக்கப் படைகளின் ஒட்டுமொத்த தளபதியாக இருந்தவன், அகமெம்னன்.

உடனே ஹெலனை மீட்க படை திரட்டப்படுகிறது கிரேக்கப் படைகள்.

ஹெலனுக்காக கிரேக்க படைகளுக்கும் டிராய் நகர படைகளுக்கும் 10 ஆண்டுகள் போர் நடக்கிறது.

அக்கிலிஸ் ட்ரோஜன்  பக்கத்து மாவீரன் ஹெக்டரைக்  கொல்லுகிறான். ஹெக்டேர்  உடலை சின்னாபின்னப்படுத்துகிறான். கடைசியில் ஹெக்டேரின் தந்தை பிரியம் வேண்டிக்கொண்டவுடன் அவனது உடலை கொடுக்கிறான். ஹெக்டரின் ஈமச்சடங்குடன் முடிகிறது இலியட் காவியம்.

பிறகு அக்கிலிஸ் கொல்லப்படுவது பற்றி எல்லாம் இதில் இல்லை.

பத்தாவது ஆண்டில் இறுதியில் 50 நாட்களில் நிகழ்வுகளை மட்டும் இலியட் காவியம் விவரிக்கிறது என்றும், கடைசி சில வாரங்களில் நிகழ்வுகளைப் பாடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

காதலும் வீரமும் தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை  இலியட்டில் இருந்தே உலகம் கற்றது.

ஒரு பெண்ணும் அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

ஆனால் இலியட்டை வெறும் கதையாக பார்க்க இயலாது.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞனின் பார்வையில் அந்தக் காலகட்டத்தில் கிரேக்க நாகரிகம் வரலாறு பெருமைகள் அனைத்தையும் ஏந்தி நிற்கும் ஒரு பொக்கிஷமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

சமூக உண்மைகளும் சரித்திரப் பதிவுகளும்  கவியின் கற்பனையும் கலந்து இருக்கும் விகிதம் கண்டிப்பாக பிரமிப்பூட்டக் கூடியது.

எனக்குப் பிடித்த சில செய்திகள்.

பதினெட்டாவது காண்டத்தில் ஒரு கற்பனை. எஜமானனுக்கு பணிவிடைகள் செய்ய ஓடிவந்த பணிப்பெண்கள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு உண்மையான பெண்களை போலவே இருந்தனர். அவர்கள் பேசவும் உடல் உறுப்புகளை அசைக்கவும் செய்தது மட்டுமன்றி, அறிவோடும் இருந்தனர். கடவுளிடமிருந்து அவர்கள் தங்கள் தொழிலை திறம்பட கற்றிருந்தனர்.

இன்றைய, ரோபோட்டிக்ஸ் முன்னோடி ’ஹோமர்’ என்று அறிய முடிகிறது.

கல்யாண பாடலை மிக தூரத்துக்கு தெளிவாகக் கேட்க முடிந்தது என்று அதே 18ஆம் காலத்தில் இன்னொரு இடத்தில் செய்திகள் வருகிறது. ரேடியோவை கற்பனை செய்து பாடிய பாரதி நினைவுக்கு வருகிறான்.

மகா அலெக்சாண்டர் உறங்கும் பொழுது தனது தலைமாட்டில் இந்த நாவலை வைத்துவிட்டு உறங்குவான். தன்னை அக்கிலிஸ் தோழன் என்று பெருமைபட கூறுவானாம்,

காவியம் பல ஆயிரம் நினைவுகளை தட்டி எழுப்பி ஊஞ்சலாடச் செய்கிறது இன்பத்தில்.

“ஹோமரின் இலியட்”
தமிழில் நாகூர் ரூமி
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 814
விலை :  350/-

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

விறுவிறுப்பான திரைக்கதை எழுதி முழுநீள படத்தை எடுக்கலாம்.

0
நூல் அறிமுகம்   அருள் மெர்வின் ராஜராஜனின் கொடை எங்க  ஊர்ப்பக்கத்தில் கோயில் திருவிழாக்களை ‘கொடை’ என்பார்கள். பெரும்பாலும் கோயில் நிலங்கள், கோயில்களுக்கான வரி விலக்குகள், கோயில் பராமரிப்புகள் யாராவது கொடையாக கொடுத்ததாக இருக்கும். பெரும்பாலும் மன்னர்கள். அப்படி...

எப்படிப் படித்தாலும் புரியும், ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

0
நூல் அறிமுகம் - சத்ய ஸ்ரீ   பல பதிவுகள் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களைப் பற்றியும் அவரது நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் "ஒற்றன்" பற்றியும். தலைப்பைப் பற்றி கேள்விப்பட்டதுமே ஏதோ ‘துப்பறியும் நாவல் போல இருக்குமோ’,...

‘ஏய் நத்தையே, உன் கதை என்ன?’

0
நூல் அறிமுகம்  கருணா மூர்த்தி(வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம்.குழு) நாட் என்று சொல்வார்கள். Knot என்பது திரையுலகில் சகஜமாக புழங்கும் வார்த்தை. ஒரு நாட் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு இரண்டரை மணி நேரம் அல்லது மூன்று...

படியுங்கள். உங்களுக்கும் பிடிக்கும்

0
  நூல் அறிமுகம்   சுபாஷ்ணி ரமணன்   செல்லம் ஜெரினாவின்  நந்தனின் அநுராகம். பெயரே வசீகரமாய் இருக்கிறது. கதையும் அப்படியே. நந்தன் யார்? அவன் அநுராகம் எது என்பதுதான் கதை. சௌந்திரம்மாளின் அண்ணன் மகன் தான் நந்தன். பெற்றோரை இழந்த அவன்...