0,00 INR

No products in the cart.

வழக்கம் போல மௌனம்தான்!

பொலிடிகல் பிஸா

– எஸ். சந்திர மௌலி

 

பெயரில் பிரச்னை

ட்டு வங்கி அரசியலில், ஆட்சியாளர்கள் இன்ன செய்தால், இன்ன ஜாதி, இன, பிரிவு மக்களின் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள். ஆனால், அது சில சமயம் தப்புக் கணக்கு ஆகிவிடுகிறது. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். அண்மையில் ஒரு தரப்பு பழங்குடி இனத்தவர்களைக் கவர, அவர் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்துக்கு “ராணி கம்லாபதி ரயில் நிலையம்” என பெயர் சூட்டுவதாக அறிவித்தார். கம்லாபதி, கோண்டு இனத்தைச் சேர்ந்த 18 ஆம் நூற்றாண்டு ராணி. ஆனால், இந்த அறிவிப்பில் மாநில பா.ஜ.க.வினர் அப்செட் ஆகி விட்டனர். காரணம், ராணி கம்லாபதி ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்டவர் என சரித்திரம் சொல்கிறது.  இப்போது, ஒரு தரப்பினர். ரயில் நிலையத்துக்கு வாஜ்பாய் பெயரை சூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பேரில் என்ன இருக்கிறது என்பது அரசியலில் எடுபடாது போல!

பிரியங்காவுக்கும் வருணுக்கும் போட்டி

காங்கிரசும், பா.ஜ.க.வும் எதிலும் ஒத்துப் போகாது என்றாலும், பிரியங்கா காந்தியும், வருண் காந்தியும் கட்சிக்கு அப்பால் சமீபத்தில் ஒரு விஷயத்தில் ஒத்து போயிருக்கிறார்கள். அது என்ன? உ.பி.யில் லகிம்புர் கெரி வன்முறை விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை, மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில்தான். இருவரும் தனித்தனியே பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். பிரதமரது ரியாக்‌ஷன் என்ன? வழக்கம் போல மௌனம்தான்!

அனைவரும் அப்செட்!

த்தராகண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. அங்கே காங்கிரசின் சமூக ஊடகங்கள் மூலமான தேர்தல் பிரசாரப் பணி இளைஞர்கள் டீம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத்தை இந்த அணியினர் கண்டுகொள்வதே இல்லையாம். அண்மையில், அவர்களை சந்தித்த ராவத், அவர்களிடம் கடுமையாகப் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதனைச் சற்றும் எதிர்பாரத இளைஞர்கள் டீமும் அப்செட்டாம். இன்னொரு பக்கம் தன்னை அதிகாரபூர்வமாக முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் இன்னமும் அறிவிக்கவில்லையே என்றும் மனம் புழுங்கிக்கொண்டு இருக்கிறாராம் ராவத். முதலில் ராகுலுக்கு கட்சியில் என்ன ரோல் என்று காங்கிரஸ் முடிவு செய்யட்டும் பாஸ்!

முதல்வருக்கு மன்றம்

ட்டிஸ்கரின் முதலமைச்சராக இருக்கும் பூபேஷ் பகலை மாற்றுவது என்று காங்கிரஸ் மேலிடம் யோசித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அலெர்ட் ஆகிவிட்டார் பூபேஷ் பகல். உடனே, அதிரடியாக தன் ஆதரவாளர்களைத் திரட்டி, பூபேஷ் பகல் ஆதரவாளர்கள் மன்றம் என்று மாநிலம் முழுக்க ஆரம்பிக்க ஏற்பாடு செய்துவிட்டார். திடீரென்று ஆதரவாளர்கள் திரண்டதைக் கண்டு மிரண்டு போன கட்சி மேலிடம், முதலமைச்சர் மாற்ற முடிவினைக் கிடப்பில் போட்டுவிட்டதாம்! இந்த சுறுசுறுப்பினை மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் காட்டினால் நல்லா இருக்குமில்ல?

சுவாமியின் சரணம்

பா.ஜ.க. தயவில் ராஜ்யசபாவுக்கு சென்ற சுப்ரமணியம் சாமி, நெடுங்காலமாகவே மத்திய அரசின் நடவடிக்கைகளையும், பிரதமரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பா.ஜ.க. மற்றும் மோடி விமர்சனங்கள் கட்சிக்கு குடைச்சல் கொடுக்கின்றன. அவரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2022வுடன் முடிகிறது. தன்னை மீண்டும் ராஜ்யசபாவுக்கு பா.ஜ.க. அனுப்புமா? அனுப்பாதா என்ற டவுட் சுவாமிக்கு வந்துவிட்டது. அதற்காக காய்களை நகர்த்தத் துவங்கிவிட்டார். திரிணாமூல் சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், மம்தாவை அண்மையில் சந்தித்திருக்கிறாராம் சுவாமி! தன் கட்சி சார்பில் ராஜ்யசபாவுக்கு சுவாமியை அனுப்பி வைத்தால் அவர் பா.ஜ.க.வுக்கு  தலைவலியாக இருப்பார் என்று நினைக்கிறாராம் மம்தாவும்! ஒரே மூவ்; டபுள் லாபம்!

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மம்தா பானர்ஜி இப்போது கேள்வி கேட்கமாட்டார்

0
அரசியல்   - எஸ். சந்திரமௌலி   இந்திய ஜனநாயகம் “ஜனாதிபதி தேர்தல்” என்ற திருவிழா முடிந்து, அடுத்து “துணை ஜனாதிபத தேர்தல்” என்ற அடுத்த திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது. பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் ஜகதீப் தங்கர் வேட்பாளர். காங்கிரஸ் உள்ளிட்ட...

விற்பதற்கல்ல! விதைக்காக

0
பொலிடிகல் பிஸா - எஸ். சந்திரமௌலி   கேட்பீர்களா? கேட்பீர்களா? பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. பாராளுமன்றத்தில் பேசும்போது அவர் இந்தி, ஆங்கிலம் என்று பொளந்து கட்டுகிறார். ஆனால், தன் தாய்மண்ணுக்கு...

மீண்டும் ராகுலுக்கு அமேதி மேல் ஒரு கண்!

0
பொலிடிகல் பிஸா   - எஸ். சந்திரமௌலி பிரஷாந்த் கிஷோரை வளைக்க போட்டி மம்தா பானர்ஜி, மு,க.ஸ்டாலின் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரை 23ஆம் வருட சட்ட மன்றத் தேர்தலுக்கு வளைத்துப்...

மைலாப்பூரில் இட்லி கச்சேரி

சுஜாதா தேசிகன்                                             ...

எதையும் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

0
“உயிரோடு உயிர் சேர்வதே அன்பு” என்ற உண்மையை, செஸ், கிரிக்கெட் போன்ற எளிய உதாரணங்கள் மூலம் எடுத்துக்கூறி, மிகப் பெரிய தத்துவத்தை எளிமையாக புரிய வைத்தது, மஹா பெரியவரின் 'அருள் வாக்கு'! - ராமச்சந்திரன்,  நாமக்கல் எஸ்.பி.முத்துராமன்...