0,00 INR

No products in the cart.

இந்தப் பிரபஞ்சமே இறைவனின் வடிவம்

 

டி.வி. ராதாகிருஷ்ணன்

னி உனக்கு ரகசியமானதைச் சொல்ல விரும்புகிறேன். காரணம் நீ என்னுடைய உதவியாளனும், நண்பனுமாவாய்…என்று  உத்தவரிடம் கிருஷ்ணன் மேலும் சொல்ல ஆரம்பித்தார்.

யோகம் செய்தல், நன்மை செய்தல், வேதங்களைப் படித்தல், ஜெபித்தல், தீயில் ஆகுதி செய்தல், தர்மம் செய்தல், தீர்த்த யாத்திரை போதல் போன்றவற்றைவிட என்னை அடைய எளிய வழி சத்சங்கங்கள்தான். அது நல்லோரின் சேர்க்கையாகும். ஆகவே, பந்தங்களிலிருந்து விடுதலையளிக்கும்.

சத்சங்கத்தினால், தைத்தியர்கள் (தேவ புருஷர்கள்), ரஜோ குணமுடையவர்களும், தமோ குணமுடையவர்களுமான அரக்கர்கள், மிருகங்கள், பறவைகள், கந்தர்வர்கள், அப்சரஸ், பெண்கள், நாகர்கள், ஒதுக்கப்பட்ட பெண்டிர் போன்றவர்கள் பலர் என்னை அடைந்தார்கள்.

விருஷிபர்வா(அரசன்), பலிச் சக்கரவர்த்தி, பானா(பலிச்சக்கரவர்த்தியின் மகன்), விபீஷணன் (மூவரும் அரக்கர்கள்), சுக்ரீவன், அனுமார் (குரங்கு வகைகள்), ஜாம்பவான் (கரடி), கஜேந்திரன்(யானை), ஜடாயூ(பறவை), வியாபாரியாகிய துலாதரா, வேடனாகிய தர்மவாதன், பூக்களை விற்கும் கூன் விழுந்த முதிய பெண்மணி, குப்ஜா, கோபியர்கள், பிருந்தாவனத்திலிருந்த அந்தணர்கள் ஆகியோர் என்னிடம் ஏற்பட்ட சத்சங்கத்தால் முக்தி பெற்றனர்.

மேலே குறிப்பிட்டவர்கள் வேதம் படிக்கவில்லை… எந்த முனிவர்க்கும் கைங்கர்யம் செய்யவில்லை. எந்தவித விரதங்களும் மேற்கொள்ளவில்லை.

எனினும் என்னுடைய சேர்க்கையால் முக்தி நிலையை அடைந்தனர்.

நான் பலதேவரோடு அக்ரூரரால் மதுராநகர் சென்றபோது, கோபியர்கள் என்னைக் கண்டு என்னிடம் அன்பு செலுத்தினர். அவர்கள் அதிக அறிவு பெறவில்லை. ஆயினும் என் மீதுள்ள அன்பால் என்னை அடைந்தார்கள்.

ஆகையால் உத்தவரே! சாஸ்திரங்களின் கட்டளைகளையும், தடுக்கப்பட்டவற்றையும்  கைவிட்டு, இன்பம், தியாகம், அறிந்தவை, தெரிந்தவை, இனி அறியப் போகின்றவை யாவற்றையும் கைவிட்டு, முழுமனத்தோடு என்னிடம் அடைக்கலம் புகுவாய். உலகிலுள்ள எல்லாவற்றிலும் கலந்து நிற்பவன் நான். அஞ்சாமல் இருப்பாய்.

இவற்றைக் கேட்ட உத்தவர் கண்ணனிடம் மேலும் கேட்டார்…

யோகங்களின் முதல்வனே! நான் நீங்கள் கூறுவதை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனினும் எனது மனத்திலிருந்து சந்தேகங்கள் நிறைவடையவில்லை. அதனால், மனம் சஞ்சலமடைகிறது. குழப்பமடையச் செய்கிறது. நான் எனது கர்மங்களை தொடர்ந்து செய்ய வேண்டுமா? அல்லது விட்டு விடலாமா?

கிருஷ்ணன்…

எல்லாம்வல்ல இறைவன், எல்லா உயிர்களுக்கும் காரணமானவன் தன்னை பின்வருமாறு காட்டிகொள்கிறான்.

எப்படி ஆகாயத்தில் வெப்பமாகக் காணப்படும் நெருப்பு… அரணிக்கட்டைகளைக் கடையும் போது தீயாகத் தோன்றுகிறதோ, அதுபோல, நானும் பராபஸ்யந்தி, மத்தியா, வைகரி(வாக்குகளின் பல்வேறு ரூபங்கள்) என்று வேதங்களில் தோன்றுகிறேன்.

அதுபோல உணர்வுகளைத் தூண்டும் ஐந்து இந்திரியங்கள் (ஞானேந்திரியங்கள்), செயல்களைச் செய்யும் ஐந்து  கர்மேந்திரியங்கள். மேலும் மனம், புத்தி, அகங்காரம் மற்றும் மூவகை குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ்) அவற்றுடன் இறைவன் ஆகிய இவைகளின் கூட்டால் எல்லா உயிர்களும் விதவிதமாகக் காணப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மூலகாரணம் நான் (இறைவன்) பிரகிருதியின் முக்குணங்கள், மேலும் மாயையேயாகும்.

முதன் முதலில் இந்த பிரபஞ்சம் உருவமெடுப்பதற்கு முன் எல்லாம் ஒன்றான மூலம் பிரம்மமாயிருந்தது. பின் காலத்தினாலும், பிரகிருதியின் மாயையாலும் இந்த உலகம் உண்டாகி, பூமி, விதைகள், செடிகள், மரங்கள், ஊர்வன, பறப்பன, மனிதர்கள் என்று பலவகைப் பரிணமித்தன.

ஆகையால், இந்தப் பிரபஞ்சமே இறைவனின் வடிவம். எப்படி துணி நூல்களால் நெய்யப்பட்டுள்ளதோ, துணிக்கு நூல் ஆதாரமோ… அதுபோல இந்த பிரபஞ்சத்துக்கும் உலகுக்கும் இறைவனே ஆதாரம்.

ஆனாலும், இறைவன் தான் படைத்த உலகினின்று தனித்து நிற்கிறான்.

இந்த உலகம் என்ற மரம் காலத்தால் பழைமையானது. இயற்கையின் செயலால் பூக்களையும், பழங்களையும் கொடுக்கிறது.

இந்த மரத்துக்கு நன்மை, தீமை என்ற இரண்டு விதைகள் உண்டு. நூற்றுக்கணக்கான வேர்கள் உண்டு. மூன்று அடி மரங்களுண்டு. முக்கியமாக ஐம்பெரும் கிளைகளும் 11 சிறிய கிளைகளும் உண்டு. அந்த மரத்தில் இரண்டு பறவைகள் கூடுகட்டி அமர்ந்துள்ளன. இரண்டு பழங்களுண்டு…

அந்த மரம் சூரியன் வரை வியாபித்துள்ளது.

மூன்று அடி மரங்கள் எனப்படுபவை முக்குணங்கள் (ஸத்துவம், ரஜோ, தமோ)

ஐந்து பெரும் கிளைகள்… பஞ்சபூதங்கள் (மண், நீர்,நெருப்பு,காற்று, ஆகாயம்)

பதினொரு கிளைகள் என்பவை, ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள் ஆகியவையுடன் மனது ஆக 11.

இரண்டு பறவைகள்… நமது உடலிலுள்ள ஜீவனும், பரமாத்மனும்.

மரத்தின் மூன்று பட்டைகள்… நமது உடலிலுள்ள கபம், பித்தம், வாயு.

இரண்டு பழங்கள்… இன்பம், துன்பம்.

கழுகு போன்ற பறவைகள் (சாதாரண மனிதர்கள்)துன்பம் தரும் பழங்களையும்… ஞானமுற்றவர்கள் அன்னப்பறவையினைப் போல இன்பம் தரும் பழங்களையும் உண்கின்றனர்.

ஆகையால், குருவருளால் ஞானம் பெற்று, பக்தி வழியில் சென்று, அறியாமையை நீக்கி… ஆத்ம ஞானம் பெற்று என்னை அடைவாயாக.

(தொடரும்)

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...