0,00 INR

No products in the cart.

வானம் ஏன் நீல நிறத்தில் தெரிகிறது?

நூல் அறிமுகம்

 

இந்துமதி கணேஷ்

 

யற்பியல் என்றாலே எனக்கு ஒவ்வாமைதான். எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் அதன் மேல் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் கல்லூரியில் பொறியியல் சேர்ந்தபோது அங்கு அருள்தாஸ் சாரின் வகுப்பு அவ்வளவு அருமையாய் இருக்கும். ‘இதைதான் இயற்பியலில் நாம் தெரிந்து கொள்ளாமல் இருந்தோமா’ என்று வருந்தும் அளவிற்கு தெள்ளத்தெளிவாய் புரியும்படி எடுப்பார். சிலபஸ்சில் உள்ள பாடங்களை அவர் நடத்தி நான் பார்த்ததே இல்லை. ஆனால் அடிப்படையை அருமையாய் நடத்துவார். ‘இதையெல்லாம் கற்றுக்கொள்ளமால் எப்படி கடினமான கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்கிற அவரின் வாதம் மிகச் சரி என்று எனக்குத் தோன்றும். இந்த முன்கதை எல்லாம் இயற்பியலில் ஆர்வமே இல்லாத நான் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள். ‘ராமன் எஃபக்ட் என்பதை பற்றி பள்ளியில் கற்று இருக்கிறேன்’ என்ற போதும், ‘அதனால் உள்ள பயன் என்ன?’ என்று விளங்கியதில்லை. சி.வி. ராமன் அவர்கள் எதற்காக இந்த கோட்பாடுகளைக் கண்டுபிடிக்க எண்ணினார் என்பதை அறிந்த பிறகுதான் அவரின் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் கூடியது. சி.வி.ராமன் அவர்கள் இறந்து 125 ஆண்டுகள் கழித்து அவரைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது இந்த புத்தகம்(2013). புத்தகத்தின் ஆசிரியர் வெங்கடேஸ்வரன் அவர்களும் ஒரு விஞ்ஞானி என்பதால் ராமன் அவர்களின் கண்டுபிடிப்பை நமக்கு எளிதாய் விலாவாரியாய் விளக்குறார்.

தன் அறிவியல் கண்டுபிடிப்புக்காக ‘நோபல் பரிசு’ பெற்ற முதல் ஒரே இந்தியர் திரு. சந்திரசேகர வேங்கட ராமன் (சுருக்கமாய் சி.வி.ராமன்) தான், இன்றுவரை வேறு எந்த இந்தியரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. நோபல் பரிசு வாங்கும் ஓர் ஆண்டிற்கு முன் இவரின் கண்டுபிடிப்பை மெச்சி இவருக்கு கௌரவ ‘சர்’ என்கிற பட்டம் 1929ல் வழங்கப்பட்டது. 1930ல் திரு. ராமன் அவர்கள் நோபல் பரிசை பெற்றுக் கொள்ளும்போது
கண்கலங்கினாராம். அதற்கான காரணம் என்னவெனில் அப்போது நமது இந்தியாவிற்கென்று ஒரு தேசியக் கொடியோ, தேசிய கீதமோகூட கிடையாது என்பதுதான். ராமன் விருது வாங்கியபோது இங்கிலாந்தின் கொடி பறந்ததாம். இங்கிலாந்தின் தேசிய கீதம்தான் ஒலித்ததாம். ராமன் அவர்கள் விருது வாங்கியபோது இந்தியாவில் தீவிரமான சுதந்திர போராட்டங்கள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இவர் அதில் நேரடியாக பங்கு கொள்ளாதபோதும் தன்னுடைய விருதை பெற்றுக்கொண்டு தனக்கான வாழ்த்து இந்தியாவில் ஜெயிலில் இருந்து வந்தது என்றாராம். அனுப்பியவர் மஹாத்மா காந்தி அவர்கள் அப்போது சிறையில் இருந்தாராம்.

திரு. சி.வி.ராமன் கல்லூரியில் பயின்ற போதும் பின்பு வேலைக்கு சேர்ந்த போதும் இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் கல்வி கற்பதும் உயர் பதவிகளை வகிப்பதும் சம்மதம் இல்லை என்ற போதும் எல்லா பணிகளையும் அவர்களால் செய்ய முடியவில்லை. அப்போது இந்திய வரைபடத்திற்காக great trigonometrical survey எடுக்கப்பட்டது, அதற்கு சீன எல்லைக்கு அருகில் திபெத்தின் அடர் காடுகளுக்கு போக வேண்டி இருந்தது. அங்கு திபெத்திய மத சாமியார்களுக்கு மட்டுமே அனுமதி. அங்கு செல்ல திபெத்திய முக அமைப்புடைய மணி சிங் மற்றும் நயின் சிங் இருவரும் பயிற்சி அளிக்கப்பட்டு மாண்டோகோமேரி என்கிற ஆங்கில அதிகாரியால் அனுப்பப் பட்டிருக்கிறார்கள் என்பது மிக சுவாரஸ்யமான தகவல். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சில பாடசாலைகளையும் கல்லூரிகளையும் நிறுவினார்கள் என்ற போதும் ஆய்வு கூடங்கள் எல்லாம் இல்லை.

மஹேந்திர லால் சர்க்கார் என்றவர் தான் இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தை முதலில் உருவாக்கினார். கல்கத்தாவில் வேலையில் இருந்த போது இந்த கட்டிடத்தை கண்ட ராமன் ஓடும் ட்ராமிலிருந்து கீழே குதித்து “என்னால் இங்கே பணி செய்ய முடியுமா?” என்று கேட்டாராம், அன்றிலிருந்து அவரது ஆராய்ச்சிகள் தொடங்கியது, உலகப் புகழ்பெற்ற ராமன் கோடுகளை அவரும் அவரின் உதவியாளர்களும் சேர்ந்து கண்டுபிடித்தது இங்குதான். அக்கௌன்ட் ஜெனரல் அலுவலகத்தில் கணக்கராக இருந்த ராமன் காலையும் மாலையும் வேலை நேரம் போக மீதி நேரம் ஆராய்ச்சியில் ஈடுபடுவாராம்.

ராமன் கல்கத்தாவில் அரசு பணியில் இருந்த போதே அவருக்கு இயற்பியல் பேராசியராக ஒரு வேலை கிடைத்தது, அதில் வருவாய் குறைவாக இருந்த போதும் அந்த வேலைக்கு சேர நினைத்தார். அந்த வேலையை அவர் பெற ஒரு சிறு சிக்கல் இருந்தது. அந்த நாட்களில் வெளிநாட்டில் சென்று படித்து வந்தவர்களுக்குத்தான் பேராசிரியர் வேலையாம். அந்த சட்டத்தை திரு. சி. வி. ராமனுக்காக மாற்றி அமைத்தார் அப்போது கல்லூரியின் துணை வேந்தராக இருந்த அஷ்டதோஷ் முகர்ஜி அவர்கள். ‘வெளிநாட்டிற்கு போய் வந்திருந்தாலே போதும்’ என்று மாற்றப்பட்ட விதியால் திரு. ராமன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா அனுப்பப்பட்டார். அந்த கடல் பயணத்தின் போதுதான் அவருக்கு பல கேள்விகள் பிறந்தன. அதன் விழைவாய் அவர் கண்டு பிடித்ததுதான் ராமன் விளைவு.

சர் ராமனை யோசிக்கத் தூண்டிய கேள்விகள் இரண்டு. ‘வானம் ஏன் நீல நிறத்தில் தெரிகிறது?’ இதற்கான பதிலை ரலைத் என்கிற விஞ்ஞானி சரியான விளக்கங்களுடன் கண்டுபிடித்து கூறினார். ஆனால் ‘கடல் ஏன் நீல நிறமாய் இருக்கிறது‘ என்பதற்கு அவரிடம் சரியான பதில் இல்லை. அதைத்தான் ராமன் கண்டுபிடித்தார். ‘ராமன் விளைவு என்பது என்ன ? அதன் மூலம் அவர் எதை நிறுவினார்’ என்பதையெல்லாம் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். எளிமையான வழியில் விளக்க பட்டிருக்கிறது. ஆனால் நான் ஆங்கில வழி கல்வி மூலம் பயின்றதால் சில வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை கண்டுகொள்ள சிரமப்பட்டேன். அதற்கும் ஆசிரியரே கடைசியில் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கிறார்.

இன்று பல நவீன கருவிகளுக்கு ராமன் கோடுகள்தான் ஆதாரமாக இருக்கின்றன என்பது மிகப் பெரிய பிரமிப்பு எனக்கு. விமான நிலையங்களில் நமது பைகளை சோதனை செய்ய எக்ஸ் ரே கதிர்களை பயன்படுத்துகிறார்கள், இது உலோகங்களை இனம் காட்டும் என்ற போதும் போதை மருந்துகளை கண்டுப்பிடிக்க பயன்படுத்தப்படும் பாதுகாப்புக் கருவி ராமன் விளைவை(molecular scattering of light) கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்து பெருமையாய் உணர்ந்தேன்(அவர் இந்தியர் இல்லையா அதான் அந்த பெருமை). இதைபோல பெட்ரோலியத் துறை, மருத்துவத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் தயாரிப்பை கண்காணிக்கவும் வண்ணப்பூச்சுகள் இருக்கும் போது எவ்வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்துகொள்ளவும் ராமன் விளைவே துணைபுரிகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் அட்டகாசத்தால் யூதர்கள் ஜெர்மனியில் இருந்து தப்பினார்கள். இப்படி தப்பி ஓடியவர்களில் ஐன்ஸ்டீன் முதல் பல மேதமையான விஞ்ஞானிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான மாக்ஸ் பார்னை அப்போது இந்தியாவிற்கு அழைத்தவர் திரு,ராமன் அவர்கள். ஆனால் மாக்ஸ் பார்னை தொடர்ந்து இந்தியாவில் இருக்க விடாமல் துரத்திவிட்டனர் ஆங்கிலேயர். மாக்ஸ் பார்ன் மட்டும் தொடர்ந்து இந்தியாவில் இருந்திருந்தால் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி இந்நேரம் சிகரத்தில் இருந்திருக்கும். மேலும் இந்தியாவின் அணுஉலை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாய் அவர்கள் திரு. சி.வி.ராமனிடம் கற்கவே இந்தியாவிற்கு வந்தாராம். பின்பு அவரின் வழிகாட்டுதலின் பேரில் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று. நேருவுடன் ராமன் முரண் பட்டிருக்கிறார். ஆனால் அதை பற்றிய தகவல்கள் புத்தகத்தில் இல்லாதது சற்று ஏமாற்றம்தான். ஆனால், நோபல் பரிசை வென்ற ஒரு கோட்பாடை எளிதில் புரியவைக்க முயன்றதற்கு வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

திரு. சி.வி.ராமனுக்கு பின் நம் இந்தியாவில் அறிவியலில் இப்படிப்பட்ட சாதனையை யாருமே செய்யவில்லை என்று வருந்தும் அதே நேரம் இந்தியாவைவிட சீனா அறிவியல் துறையில் வேகமாய் முன்னேறி வருவதை சுட்டுகிறார் ஆசிரியர். ‘பொறியியல் படிப்பிற்கும் மருத்துவத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிவியலுக்கும் கொடுக்க வேண்டும்’ என்பதே ஆசிரியரின் அவா. ஒரு தேசம் வளர்ச்சி பெறுகிறது என்பதை அங்குள்ள அறிவியல் வளர்ச்சியை வைத்துத்தான் கணக்கிடுவர் என்பதால் நம் தேசத்தை வளமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுதல் நமக்கு நலம் பயக்கும். முதல் அடியை இந்த புத்தகத்தை வாசித்து தொடங்கலாம்.

‘விடுதலை வேள்வியில் விளைந்த இந்திய அறிவியல்’
ஆசிரியர் : த. வி. வெங்கடேஸ்வரன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம். சென்னை.
பக்கங்கள் : 92

 

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

தூக்கு மேடையின்  அமைப்பு எப்படி இருக்கும்?

1
நூல்  அறிமுகம் பொன் விஜி  (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)   தனது சொந்தத் தொழிலான விவசாயி ஒருவனுக்கு, இன்னொரு பரம்பரை பரம்பரையாகச் செய்துவந்த ஒரு தொழிலை, வறுமையின் நிமித்தம் ஏற்றுக் கொள்ள வேண்டிய...

குறுகத் தரித்த உலக சரித்திரம்

நூல் அறிமுகம்   சித்தார்த்தன் சுந்தரம்   வரலாறு என்றாலே அதை ஓர் அசூயையாகப் பார்க்கும் போக்கு நம்மில் பலருக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்குத் தந்த மதிப்பை நம்மில் பெரும்பாலோர்...

பாம்புக்கு பயந்த ரசிகர்கள்

0
நூல் அறிமுகம்   - எஸ். சந்திரமௌலி   நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா அண்மையில்  சென்னையில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.  அதனையொட்டி விருதுநகரைச் சேர்ந்த என்.ஏ.எஸ் சிவகுமார் தொகுத்த காருக்குறிச்சி நூற்றாண்டு விழா மலர்...

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”.

0
நூல் அறிமுகம் ‘செம்பருத்தி’ - சாந்தி மாரியப்பன் (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)   (தி.ஜானகிராமன்) தி.ஜா.வின் நாவல் வரிசையில் மனிதர்களின், உறவுகளின், ஆண்-பெண் உறவுச்சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் இன்னொரு நாவல்தான் “செம்பருத்தி”. ஆனால் மற்ற நாவல்களை...

இந்நாவல் ஓர் ஆவணம் என்றே சொல்லலாம்.

0
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் -  நூல் அறிமுகம்   உலகில் பல்லாயிரக்கணக்கான மதங்கள் இருந்தாலும் மிகத் தொன்மை வாய்ந்த மதங்களில் ஒன்றாக (Zoroastrianism) சொராஷ்ட்ரியம் மதமும் கருதப்படுகிறது. கி.மு 50000 - 20000 இடையில் இம்மதத்தின்...