படத்துக்கான கதைப் போட்டி முடிவுகள்
கல்கி பத்திரிகை பொருத்தவரை எங்கள் இருவருக்கும் எப்போதும் ஒரு
முக்கியத்துவம் கொடுத்துப் பெருமிதப்படுத்துவார்கள்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்தும் போது ஏதேனும் ஒரு
நிலையில் எங்கள் பங்களிப்பு இருக்கும்.
பல சமயங்களில் நூற்றுக்கணக்கான போட்டிக் கதைகளை கட்டுக்கட்டாக
அனுப்பி வைப்பார்கள். நாங்கள் இருவரும் ஒரு கதை கூட விடாமல்
படிப்போம். முழு கதையையும் கட்டாயம் படிப்போம்.
இந்த முறை, போனில் திரு வி.எஸ்.வி.ரமணன் இறுதிச் சுற்றுக்கான 21
கதைகளை அனுப்பி வைப்பதாக சொன்னபோது கல்கி எங்களை
என்றென்றும் நினைவில் வைத்திருப்பது பற்றி நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்
ஏற்பட்டன.
படத்துக்கென்று போட்டிக் கதை எழுதும்போது வேறு வழியின்றி ஒரு
எல்லைக்கோடுகளுக்குள் அமர்ந்து எழுத வேண்டியுள்ளது. எனில்
பலருக்கும் ஒரே மாதிரிக் கற்பனை தோன்றுவது இயற்கை. அதையும் மீறி
out of the box யோசிப்பது பெருங்கலை. அதைச் செய்தவர்களுக்கு முதலிடம்
கொடுத்தோம்.
இந்தப் படத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது கதைக்கான
ஸ்கோப் மிகவும் குறைவு. இதை மீறி கேரக்டர்களை யோசித்து அழகான
கதை உருவாக்கியவர்கள் எங்களை வியக்க வைத்தனர்.
கதைகளில் நியாயம் தான் ஜெயிக்க வேண்டும் என்பதில் நாங்கள்
இருவரும் உறுதியாக இருப்போம். அதோடு “போட்டி கதை” என்ற
பொறுப்புணர்வு வரும்போது சமுதாயத்துக்கு ஒரு சிறு நல்ல விஷயத்தை
சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் அமைந்த கதைகள் எதையும்
விடாமல் எடுத்து, அவற்றை இரண்டாம் கட்ட பரிசீலனைக்கு
உட்படுத்தினோம்.
எப்படித் தேர்வு செய்தாலும் ஐந்து கதைகள் அற்புதமாய் இருந்தன.
“மூன்றே மூன்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி” என்ற திகைப்பில் மறுபடியும்
அவற்றை ஒருமுறை படித்து, இரண்டு கதைகளை மனமின்றி நழுவ
விட்டோம். “ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தாமல், மூன்று கதைகளுக்கு சமமான முதல் பரிசு கொடுக்கலாம்” என்ற கல்கி ஆசிரியரின் ஐடியா மிக அருமையானது. (முதல் ரேங்க் வாங்கிய பையனுக்கு மூன்றாவது ரேங்க் வாங்கிய பையனுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?)
இந்த கதைகளையெல்லாம் யார் எழுதியது என்று எங்களுக்கு தெரியாது.
பெயர்களை மறைத்து விட்டே கொடுத்தார்கள். எனவே, யார் யார் பரிசு
பெற்றார்கள் என்ற விவரம் உங்களுக்கு எப்போது தெரியுமோ
அப்போதுதான் எனக்கும் தெரியும்!
பரிசு பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
வேதா கோபாலன்
போட்டிக்கதை முடிவுகள் பின்வருமாறு:

சபாஷ்…கல்கி கல்கி தான்!
நடுவர்களுக்கு நன்றி…
வெற்றி படைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
நடுவர்களின் நேர்மை -பாராட்டுக்குரியது.
கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி .