0,00 INR

No products in the cart.

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

 

வினோத்

 

டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம்.

முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று அதில் பதிக்கபட்டிருக்கும் விபரங்களைப்  பார்த்த பின்னர்தான் இது ஒரு சமூக விழிப்புணர்வுக்கான செயல்  என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

ஐக்கிய நாடுகளின்  உலக வெப்பமயமாதல் குறித்த அறிக்கையில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்  உலகம் முழுவதும்  கடல் நீரின் மட்டம் ஒரு மீட்டருக்கும் மேல் உயர்ந்துவிடும். இப்படி அதிகரிக்கும் கடல் நீரின் உயரம் இயற்கையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் உலக வெப்பமயமாவதை குறைக்க உங்களாலான உதவிகளைச்  செய்யுங்கள் என்று மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டிருப்பதற்காக  இப்படி ஆறடி உயரமான  நாற்காலிகளை கடற்கரையிலும் பொது இடங்களிலும்  நிறுவியிருக்கிறார்கள்.

ஆனால், இந்த உயரமான நாற்காலிகளிலும்  “ ஏறி” அமர்ந்து  சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  உலகம் வெப்பமயமாதல் குறித்து விவாதித்துக்கொண்டிருப்பார்களோ?

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...